தருமபுரி சர்ச்சை- நாம் தமிழர் நிர்வாகி ஹிம்லர் பெயருக்கு பின்னணியில் உள்ள சுவாரசியம் என்ன?
சென்னை: தருமபுரியில் திமுக- நாம் தமிழர் கட்சி இடையேயான சர்ச்சைக்கு காரணமானவர் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர். சமூக வலைதளங்களில் ஹிம்லர் என்ற பெயரின் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
நாம் தமிழர் கட்சியினர் ஆளும் திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவினர் என்னை பாஜகவின் பி டீம், சங்கி என விமர்சிக்கின்றனர். யாருடா சங்கி? என பேசியபடியே பொதுக்கூட்ட மேடையிலேயே காலணியை கழற்றிக் காண்பித்தார் நாம் தமிழர் கட்சியினரின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தமிழகம் முழுவதும் திமுகவினரை கடுமையாக கொந்தளிக்க வைத்தது.
இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக என்னுடைய இயக்கம். திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் எனக்கும் நெருக்கம். திமுக அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தில்தான் நான் பேசுகிறேன் என்றார். ஆனாலும் திமுகவினரின் ஆதங்கமும் கொந்தளிப்பும் குறையவில்லை.

மொரப்பூர் சர்ச்சை
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் மொராப்பூர் பேருந்து நிலையத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள், நீண்டகால சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ஹிம்லர் விமர்சித்து கொண்டிருந்த போது திமுகவினர் மேடையேறி அவரது பேச்சை நிறுத்தினர். இதனால் மேடையின் ஓரமாக சென்று ஹிம்லர் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

வலுக்கும் சவால்கள்
மொரப்பூர் திமுகவினரின் இந்த நடவடிக்கையை சமூக வலைதளங்களில் அக்கட்சியினர் பாராட்டி வருகின்றனர். இன்னொரு பக்கம், இந்த ஊரில் பொதுக்கூட்டம் போடுகிறோம்.. மொரப்பூர் மாதிரி இங்க வந்து முறைச்சு பாருங்க.. என்று நாம் தமிழர் கட்சியினர் சவால் விடுத்து கொண்டிருக்கின்றனர். விவாத களமாக இருந்த சமூக வலைதளம் யுத்த பூமி போல இருதரப்பால் உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்த பஞ்சாயத்தில்தான் ஹிம்லர் என்ற பெயர் குறித்த சுவாரசியமான விவாதமும் நடந்து வருகிறது.

தமிழர்களும் பெயர்களும்
தமிழ்ச் சமூகத்தில் பொதுவாக சர்வதேச இடதுசாரி புரட்சியாளர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், காஸ்ட்ரோ பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு சூட்டுவது வழக்கம். பின்னாளில் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்கிறவர்கள் தூய தமிழ்ப் பெயர்களை வைத்து கொள்வதும் சமூகப் புரட்சியாளர்களான பெரியார், அம்பேத்கர் மற்றும் தமிழறிஞர்களின் பெயர்களை சூட்டிக் கொள்வதும் இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது. வரலாற்றின் பக்கங்களில் மக்களால் தண்டிக்கப்பட்ட, தூக்கி எறியப்பட்ட பாசிஸ்டுகள், நாஜிக்கள், வலதுசாரிகள் பெயர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தே வந்துள்ளனர்.

ஹிம்லர் பெயரின் பின்னணி
இப்போது உச்சரிக்கப்படும் ஹிம்லர் என்ற பெயரின் பின்னணியும் இப்படியான ஒன்றுதான்- வரலாற்றின் பக்கங்களில் ஹிம்லர் ஜெர்மனியின் ஒரு நாஜி அரசியல்வாதி. ஹிட்லர் படையின் நம்பிக்கைக்குரிய தளபதி. அவரது முழுப்பெயர் Heinrich Himmler. இந்த ஹிம்லரின் கட்டுப்பாட்டில் தான் ஹிட்லர் ஆட்சியில் சிறைச்சாலைகள் இருந்தன. ஹிட்லரின் உத்தரவை ஏற்று பல லட்சம் அப்பாவி பொதுமக்களை சிறைச்சாலைகளில் கொன்று குவித்தவர் ஹிம்லர். 2-வது உலக யுத்தத்தின் போது பிரிட்டன் படைகளிடம் சிக்கி நியூரம்பர்க் தீர்ப்பாயத்தில் (Nuremberg Trials) போர்க்குற்றவாளியாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். ஆனால் தண்டனைகளுக்கு அஞ்சி சயனை சாப்பிட்டு தற்கொலை செய்து மாண்டு போனார் ஹிம்லர் என்பது வரலாறு.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications