Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு அருகே.. வானில் என்ன அது? ஏலியன் என்ட்ரி போர்ட்டலா? ஷாக்கான மக்கள்! பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகே வட மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் நேற்று இரவு வானில் வட்ட வடிவில் மேகம் உருவாகியிருந்தது அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நமது வானம் பல்வேறு அதிசயங்களை கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாது. மனிதன் அறிவியல் அறிவை பெறுவதற்கு முன்னர் வானம் குறித்து பெரும் ஆச்சரியத்தை கொண்டிருந்தார். மழை, வெயில், புயல், சூறாவளி, ஆலங்கட்டி மழை என வானம் எப்போதும் ஆச்சரியத்தையே கொடுத்து வந்தது. எனவே வானம் குறித்து விளக்கம் பெற தொடர்ந்து மனிதன் முயன்று வந்தான். அவன் வசித்த குகைகள் தொடங்கி பல்வேறு இடங்களிலும் வானம் குறித்து ஓவியமாக வரைந்து வைத்தான்.

A strange UFO-like cloud appeared in the sky near Chennai in Tamil Nadu

பின்னர் படிப்படியாக மனிதன் அறிவியல் அறிவை பெற்ற பின்னர் ஏலியன்கள் குறித்த அச்சமும் மனிதனுக்கு எழுந்தது. அவர்கள் வருவதெனில் வானத்தை தாண்டிதானே வரவேண்டும். எனவே வானம் என்றால் பயம் கலந்த ஒரு ஆச்சரியமான உணர்வு மனிதனுக்கு தற்போது வரை நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில்தான் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வானம் வித்தியாசமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது வானத்தில் வெள்ளை நிறத்தில் மேக திரள் ஒன்றாக சேர்ந்து ஒரு வட்ட வடிவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் சினிமாக்களில் வருவதைப்போல வெளி கிரக வாசிகள் வரும் போர்ட்டலை போல இந்த மேகம் தோற்றமளித்துள்ளது. பலர் இதனை வியந்து பார்த்து போட்டோ, வீடியோ எடுத்திருக்கிறார்கள். பலர் இந்த மேகக்கூட்டங்கள் குறித்து அச்சம் எழுப்பியுள்ளனர். ராணிப்பேட்டை, திருத்தணி, சோளிங்கர், வேலூர் போன்ற இடங்களில் இந்த வட்டம் தெளிவாக தெரிந்திருக்கிறது.

A strange UFO-like cloud appeared in the sky near Chennai in Tamil Nadu

இது குறித்து வானியல் ஆய்வாளர்கள் கூறுகையில், "இது போன்ற வித்தியாசமான மேக உருவங்கள் பல்வேறு நாடுகளில் அடிக்கடி தோன்றியுள்ளன. சமீபத்தில் அதாவது கடந்த ஜனவரியில் இதேபோன்ற ஒரு வித்தியாசமான மேக தோற்றம் துருக்கியில் நிகழ்ந்திருக்கிறது. பறக்கும் தட்டு வருவதற்கான வழியை போல இந்த மேகம் உருவாகியிருக்கிறது. இந்த வகை மேகங்கள் பெரும்பாலும் ட்ரோபோஸ்பியர் எனப்படும் வளிமண்டல அடுக்கில் உருவாகின்றன. ட்ரோபோஸ்பியர் என்பது பூமியின் மிகவும் அடர்த்தி குறைந்த வளிமண்டல பகுதியாகும்.

பூமியிலிருந்து சுமார் 16 கி.மீ உயரத்தில் இந்த ட்ரோபோஸ்பியர் அமைந்திருக்கிறது. இங்கு உருவாகும் மேகங்கள்தான் இப்படி வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த மேகங்களுக்கு 'லெண்டிகுலர் மேகங்கள்' என்று பெயர். பொதுவாக மலைகள் இருக்கும் பகுதியில் இந்த மேகங்கள் உருவாகும். மலையின் மீது காற்று வேகமாக மோதும்போது அது அதே வேகத்தில் மேலெழுந்து குளிர்ச்சியடைந்து மேகமாக மாறுகிறது. இந்த உயரத்தில் வேகமாக காற்று வீசாது என்பதால் இந்த மேகங்களின் வடிவம் கலைந்து போகாது. ஆனால் விதி விலக்காக இது மலைகள் இல்லாத இடங்களிலும் தோன்றும்.

காற்று இரு திசையிலிருந்தும் ஒன்றோடு ஒன்று மோதி மேலெழுவதாலும் இந்த லெண்டிகுலர் மேகங்கள் உருவாகின்றன. இதிலேயே மூன்று வகைகள் இருக்கின்றன. ஆல்டோகுமுலஸ் ஸ்டேண்டிங் லெண்டிகுலர், ஸ்ட்ராடோகுமுலஸ் ஸ்டேண்டிங் லெண்டிகுலர் மற்றும் சிரோகுமுலஸ் ஸ்டேண்டிங் லெண்டிகுலர். இந்த மேகங்களின் வித்தியாசமான தோற்றங்கள்தான் பறக்கும் தட்டு, ஏலியன் போர்ட்டல் போன்ற வடிவத்தை நமக்கு நினைவூட்டுகிறது" என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+