ஊட்டி ரகசிய காதலால் கர்ப்பம்.. சென்னையில் பையில் குழந்தையுடன் மாணவி.. 2 கே கிட்ஸ்க்கு பெரிய பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தை சேர்ந்த 20 வயதாகும் இளம் பெண், ஊட்டியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அவருடன் படித்த மாணவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அலைபாயுதே சினிமா பட பாணியில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் கல்லூரி மாணவி கர்ப்பம் ஆனார். சென்னையில் மேல்படிப்பு படிக்க வந்த மாணவி, விடுதியில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தையை மருத்துவமனையில் தூக்கிப்போட முயன்ற போது கையும் களவுமாக காதலனுடன் சிக்கினார்.

இன்றைய 2கே கிட்ஸில் சிலர், நாடோடிகள் பட பாணியில் பெற்றோரை எதிர்த்து காதலில் இறங்குவது, அலை பாயுதே பாணியில் திருமணம் செய்வது, ஆதலால் காதல் செய்வீர் படம் பாணியில் திருமணத்திற்கு பின்னர் வாழ்வது என்று இருக்கிறார்கள். கல்லூரியில் படிக்க போகும் இளம் ஜோடிகள், காதல் என்ற பெயரில் வாழ்க்கையை தொலைப்பது அதிகமாக உள்ளது.

A student who fell in love in Ooty gave birth to a child in Chennai A lesson for 2K kids to learn

படிக்கும் வயதில் காதலில் விழுவது மட்டுமின்றி, பெற்றோரை எதிர்த்தோ அல்லது மறைத்தோ திருமணம் செய்து கொண்டு வாழ்க்கிறார்கள். வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன்பே எதிர்காலத்தை தொலைக்கிறார்கள். சிலர் சில நாள் வாழ்ந்துவிட்டு மீண்டும் பெற்றோருடன் வருகிறார்கள். சிலர் குழந்தை பெற்று வளர்க்க முடியாமல் எங்காவது வீசிவிடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

ஊட்டியில் காதல் ஜோடி

சேலத்தை சேர்ந்த 20 வயதாகும் இளம் பெண் ஊட்டியில் உள்ள கல்லூரியில் டிகிரி படித்துள்ளார். அவரோடு அங்கு ஒன்றாக படித்த மாணவரை காதலித்துள்ளார். இருவரும் ஊட்டியில் கல்லூரியில் படித்த 3 ஆண்டுகாலமும் காதல் ஜோடியாக வலம் வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அலைபாயுதே சினிமா பட பாணியில் ரகசிய திருமணமும் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் உல்லாசமாகவும் அவ்வப்போது இருந்துள்ளனர்.

மாணவி கர்ப்பம்

இதில் கல்லூரி மாணவி கர்ப்பமானார். இதனிடையே அங்கு பட்டப்படிப்பை முடித்த மாணவி சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்திருக்கிறார். இதனிடையே மாணவியின் ரகசிய காதல் கணவரும் சென்னையில் வந்து குடியேறி உள்ளார். அவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

குழந்தை பிறந்தது

குறிப்பிட்ட மாணவி மட்டும் அறையில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த விஷயம் தெரிந்தால் சிக்கலாகும் என மாணவி பயந்தார். காதலனுக்கு தகவல் கொடுத்தார். காதலனும் குழந்தையோடு மாணவியை திருவல்லிக்கேணி பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்து தங்கினார்கள். குழந்தையை என்ன செய்வது என இருவரும் யோசித்துள்ளார்கள்.

கட்டப்பையில் குழந்தை

பின்னர் இருவரும் சேர்ந்து குழந்தையை ஒரு கட்டைப்பையில் போட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவனைக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தையை பையோடு நைசாக தூக்கிபோட்டுவிட்டு தப்பியோட பார்த்துள்ளார்கள். ஆனால் அங்கு காவல் பணியில் இருந்த காவலர்ஒருவர் அவர்கள் இருவரையும் சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரித்தார். அனாதையாக குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி வந்ததாக இருவரும் தெரிவித்தனர். ஆனால் காவலருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.

குழந்தை ஒப்படைப்பு

விசாரணையில், அவர்கள் இருவரும் தாங்கள் காதலர்கள் என்றும் தங்களுக்கு பிறந்த குழந்தை என்றும் உண்மையை ஒப்புக்கொண்டனர். குழந்தை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மாணவியை அவர் தங்கி இருந்த விடுதிக்கு அனுப்பி வைத்தனர். காதலன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இனி என்ன செய்வது என்று போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+