Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசுப் பள்ளி மாணவின்னு அசால்ட்டாக நினைக்காதீங்க.. முதலிடம் மட்டுமில்லை.. ஆங்கிலம் பேசுற அழகை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாநகராட்சி பள்ளியில் பயின்ற மாணவி 578 மார்க் எடுத்து அசத்தியிருக்கிறார். மாணவி ஆங்கிலத்தில் பேசும் வீடியோ தற்போது வேகமாக ஷேராகி வருகிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இதில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

A student who studied in Greater Chennai Corporation school and achieved 2 pass with excellent English proficiency

வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்கள் 3,25,305 பேரும், மாணவிகள் 3,93,890 பேரும் பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார். இதில் மாணவர்கள் 92.37% பேரும், மாணவிகள் 96.44% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலின மாணவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் 2,478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்நிலையில், சென்னை பெரம்பூரை சேர்ந்த மாநகராட்சி பள்ளியில் பயின்ற பூங்கோதை எனும் மாணவி 578 மார்க் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக வந்து அசத்தியிருக்கிறார். மட்டுமல்லாது சிறந்த ஆங்கில புலமையையும் பெற்றிருக்கிறார்.

இவரது குடும்ப சூழல் மிகவும் பின்தங்கியது. ஒரே ஒரு அறை கொண்ட வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். தந்தை ஆட்டோ டிரைவர். உடல்நிலை சரியில்லை என ஒரு நாள் ஆட்டோ ஓட்ட போகவில்லை என்றாலும் கூட குடும்பத்தின் அன்றைய நாளுக்கான உணவு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்.

பூங்கோதைக்கு மூத்த சகோதரி B.Pharm படித்து வருகிறார். இருவருக்கும் படிப்பதற்கு என போதுமான வசதிகள் கூட கிடையாது. இருப்பினும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பூங்கோதை சாதித்து காட்டியிருக்கிறார். இந்த வெற்றி குறித்து அவர் ஆங்கிலத்தில் அளித்த பேட்டியில்,

"எனது பெற்றோர் விலையை பார்த்து பொருட்களை வாங்காத உயரத்தில் இருக்க வேண்டும். நான் பி.காம் முடித்து பின்னர் சிஏ படிக்க விருப்பப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

மாநகராட்சி பள்ளி என்றால் அது மோசமாகதான் இருக்கும், அங்கு குழந்தைகளை சேர்த்தால் அவர்களால் படிக்க முடியாது என்பது போன்ற பிம்பங்கள் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

உயர்தர தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பேசும் ஆங்கிலத்திற்கு இணையாக மாணவி பூங்கோதை சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறார். இதற்காக அவருக்கும், அவரை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தான் சார்ந்து இருக்கும் கொடுங்கையூர் பகுதி குழந்தைகள் உயர் கல்வி நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அரசு பள்ளி மீண்டும் ஒரு முறை சாதித்து காட்டியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+