அம்மு! பாஜகவை கரைத்து காலியாக்கும் நிர்மல்.. அதிமுகவில் இணைந்த பெரிய டீம்.. அடித்து ஆடும் எடப்பாடி!
பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இணைந்தார்.
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் தற்போது தன்னுடன் நெருக்கமாக இருந்த பாஜக நிர்வாகிகளை அதிமுகவை நோக்கி இழுத்து வருகிறார்.
அதிமுக பாஜக இடையிலான மோதல் முற்ற தொடங்கி உள்ளது. முதலில் இவர்கள் கூட்டணி வைப்பதில் நிறைய மோதல்கள் நிலவின. அதிமுக பாஜக கூட்டணியில்தான் இருக்கிறதா, இல்லையா என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில்தான் தற்போது பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமியை.. எடப்பாடியார் என்று வாழ்த்தி.. அண்ணாமலையை கடுமையாக தாக்கி உள்ளார்.

அண்ணாமலை மீது அட்டாக்
அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் அவரின் தலைமை குறித்து நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார். நிர்மல் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை, என்று குறிப்பிட்டு உள்ளார்.

கடுமை
இன்னும் பல கடுமையான வார்த்தைகளை அவர் தனது அறிக்கையில் பயன்படுத்தி உள்ளார். இந்த நிலையில்தான் பாஜக ஐடி விங் செயலாளர், திலீப் கண்ணனும் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் தனதயு போஸ்டில், கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம் ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார் தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார் என்று விமர்சனம் வைத்தார்.

அதிமுக
பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் தற்போது தன்னுடன் நெருக்கமாக இருந்த பாஜக நிர்வாகிகளை அதிமுகவை நோக்கி இழுத்து வருகிறார். பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இணைந்தார். ஓபிசி அணியின் தலைவராக இருந்த திருச்சி சூர்யா சமீபத்தில்தான் கட்சியில் இருந்து வெளியேறினார். அவரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில்தான் தற்போது அதன் செயலாளர் அம்மு பாஜகவில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்து உள்ளார். அவருடன் பாஜக நிர்வாகிகள் பலர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

எடப்பாடி விமர்சனம்
முன்னதாக பாஜகவில் இருந்து பல வெளியேற வாய்ப்பு உள்ளதாக வலதுசாரி அரசியல் ஆதரவாளர் ஸ்ரீராம் சேஷாத்திரி தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், தெரிந்தோ தெரியாமலோ, எடப்பாடி அவர்கள், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை மறைமுகமாக கூற ஆரம்பித்து விட்டார். கடைசிநாள் வரை இழுத்து அடிக்காமல் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னரே பாஜகவை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டுவிட்டார். தமிழக பாஜகவில் மிக முக்கிய மாற்றம் இந்த வாரம் வரும் என்று எதிர்பார்க்கிறேன், அதன் பிறகு ஒரு உத்வேகத்துடன் கட்சி இயங்க ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன். இன்னும் சில தினங்கள் பல நிர்வாகிகள் வெளியேறுவார்கள் என்று தெரிகிறது. அதன்படியே தற்போது பாஜகவில் இருந்து ஒரு டீம் அதிமுகவில் இணைந்து உள்ளது .












Click it and Unblock the Notifications