இளம்பிராயம் முதல்.. அடேங்கப்பா எத்தனை பெரிய தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார் சங்கரய்யா தெரியுமா?
சென்னை: தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பின்னர் இடதுசாரி இயக்கத்தின் பக்கம் திரும்பி தலைமறைவு வாழ்வு, சிறைவாழ்வு, தேர்தல் அரசியல் என பெருவாழ்வு வாழ்ந்தவர் மறைந்த போராளி தியாகி சங்கரய்யா.
சங்கரய்யாவும் வாழ்வும் வரலாறும்:

1922: தூத்துக்குடி ஆத்தூர் நரசிம்முலு- ராமானுஜம் மகனாக ஜூலை15-ல் பிறந்தார். 8 சகோதர, சகோதரிகள். சங்கரய்யாவின் இயற்பெயர் பிரதாபசந்திரன்.
1930-38: மதுரை புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி, ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் கல்வி பெற்றார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், முதலாவது இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றார்.
1938: மாணவர் இயக்க மதுரை மாநாட்டில் மாவட்டச் செயலாளர், 1942-ல் மாநிலச் செயலாளரானார்.
1939: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பேச வைத்தார் சங்கரய்யா
1940: ஜானகி அம்மாள் உள்ளிட்டோரை கொண்ட கிளையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார் சங்கரய்யா.
1941 பிப்.28: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கைதுக்கு எதிரான மதுரை பொதுக் கூட்டத்தில் பேசியதால் சங்கரய்யா கைது செய்யப்பட்டார்.
1942 : ஜூனில் சங்கரய்யா சிறையில் இருந்து விடுதலையானார்.
1944: கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர்; நெல்லை மாணவர் கிளர்ச்சிக்காக மீண்டும் கைது- விடுதலை
1947 ஆக.14: மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த சங்கரய்யா நாடு விடுதலை பெறுவதற்கு முதல் நாள் விடுதலை செய்யப்பட்டார்.
1950களில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது. அப்போது 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சங்கரய்யா பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார்.
1957, 62 : சட்டசபை தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் சங்கரய்யா; இந்தியா- சீனா யுத்த காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்
1964 : கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த போது சிபிஎம் கட்சியை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்
1965 : இடதுசாரி தலைவர்களுடன் சங்கரய்யா கைது செய்யப்பட்டு 16 மாத சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்
1967 : சட்டசபை தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சங்கரய்யா
1969 : விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரானார்
1977, 1980: சட்டசபை தேர்தல்களில் வென்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பணியாற்றினார்
1995: சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில குழு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு வரை சங்கரய்யா இப்பொறுப்பில் இருந்தார்.
2023: தமது 102 வயதில் முதுபெரும் போராளி சங்கரய்யா விடைபெற்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications