இது அதிர்ச்சியா இருக்கே.. மோடிக்கு எல்லாமுமாக இருந்தவரை.. தூக்கி அடிக்க முடிவு? பாஜகவில் திக்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்ததில் இருந்து பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக நிர்வாக ரீதியாக பல மாற்றங்கள் நடந்து வருகின்றன.

மத்தியில் பாஜகவின் ஆட்சியின் மூன்றாவது ஆட்சி அமைந்து இருந்தாலும்.. முன்பு அமைந்த ஆட்சிக்கும்.. இப்போதைய ஆட்சிக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. முன்பு இருந்த ஆட்சி முழுக்க முழுக்க பாஜகவின் தனி மெஜாரிட்டி ஆட்சி. இப்போது இருப்பதோ மைனாரிட்டி ஆட்சி.

Narendra Modi BJP

மைனாரிட்டி ஆட்சி என்பதால் பாஜக அரசு கட்டுண்டு கிடக்கிறது. பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் உள்ளது. ஏன் மத்திய அரசின் பல சீக்ரெட்டுகள் கூட கசியும் நிலை ஏற்பட்டு உள்ளது.

குமாரசாமி சம்பவம்: சமீபத்தில் பெங்களூரில் ஜேடி(எஸ்) கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில், மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச் டி குமாரசாமி, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிக்கு குஜராத் அரசு வழங்கிய மானியம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோன் டெக்னாலஜிக்கு வழங்கப்பட்ட மானியம் நியாயமானதாக தெரியவில்லை. அவர்கள் அங்கே தொழில் தொடங்குவதற்கு செய்த முதலீட்டில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை மானியமாக வழங்கி உள்ளனர். இது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று கூறினார். அதன்படி ஒரு நாள் கழித்து, மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி தான் சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கினார். ஊடகங்களில் 'தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக' அவர் கூறினார்.

ஆனால் முக்கியமான சில அமைச்சரவை துறைகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தற்போது பாஜகவின் என்டிஏ அரசு கடுமையான சிக்கலில் மாட்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்ட முக்கியமான ஒப்பந்தங்கள் பல கூட்டணி கட்சிகள் மூலம் வெளியே கசியும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

நிர்வாக மாற்றம்: மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்ததில் இருந்து பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக நிர்வாக ரீதியாக பல மாற்றங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் டாப் தலை ஒருவர் மாற்றப்படுகிறார். இவர் பாஜக கிடையாது. ஆனால் அரசு நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுத்தவர். தேசத்தின் பாதுகாப்பில் மிக முக்கியமான ஒருவராக இருந்தவர்.

சமீபத்தில் காஷ்மீரில் அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதை எல்லாம் கண்காணிக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. ஆனால் அதில் அவர் மிகப்பெரிய தோல்வி அடைந்து உள்ளார்.

மாற்ற முடிவு; இந்த நிலையில்தான் அந்த அதிகாரியை மாற்ற முடிவு செய்துள்ளனர். மோடிக்கு அவர் மிகவும் நெருக்கம். முக்கியமாக கடந்த 10 ஆண்டுகளில் முதல் 5 ஆண்டுகள் மோடிக்கு இவர் மிக மிக நெருக்கமாக இருந்தார்.

அவரைதான் தற்போது ஓரம்கட்ட உள்ளனர். மொத்தமாக ஓரம்கட்டி வீட்டுக்கு அனுப்ப உள்ளனர். அவரின் பதவிக்கு தமிழர் ஒருவர் வர உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார்கள். ஆனால் இங்கே ஆட்சி மாறாமல் காட்சி மாறி உள்ளது. இந்த மாற்றங்கள் பாஜக ஆட்சியிலும், கட்சியிலும் புயலை கிளப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+