Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எத்தனை நாள் அடுத்தவங்கள நம்பி இருப்பது? ஃபீலிங்காய் பேசிய செல்வப்பெருந்தகை! நோஸ் கட் செய்த ஈவிகேஎஸ்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் எத்தனை நாட்கள் தான் பிறரை சார்ந்திருப்பது? காங்கிரஸ் கட்சிக்கென்று வரலாறு இருக்கிறது என காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசிய நிலையில், ஆசை இருக்கலாம் பேராசை கூடாது என மேடையிலேயே பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் தலைவரான ஈவிகேஸ் இளங்கோவன்..

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. சில இடங்களில் டெபாசிட் இழந்ததோடு மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

EVKS Elangovan Congress Mk Stalin Politics

அதே நேரத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக நான்காம் இடத்துக்கும் 5ஆம் இடத்துக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர். அது மட்டும் அல்லாமல் பல இடங்களில் டெபாசிட் பறிபோனது. இதையடுத்து 2019ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்தித்த பிறகு ஓரளவு எம்பிக்களை பெற முடிந்தது.

இந்த நிலையில் தற்போதைய தேர்தலிலும் திமுக ஆதரவு காரணமாகவே காங்கிரஸ் எம்பிக்கள் வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மக்களைத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய செல்வ பெருந்தகை," தமிழகத்தில் எத்தனை நாள் நாம் பிறரை சார்ந்து இருக்க போகிறோம்? சுயமாக வளர வேண்டாமா? மற்ற கட்சிகளை சாராத நிலை இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் தொண்டர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.

ஆனால் நாம் எந்த திசையில் செல்ல போகிறோம் என்பதை தொண்டர்கள் தீர்மானிக்க வேண்டும். காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒன்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது" என பேசி இருந்தார். இந்த நிலையில் திமுக ஆதரவு நிலைப்பாடுதான் காங்கிரஸின் தமிழக வெற்றிக்கு காரணம் எனக் கூறிவரும் நிலையில், செல்வப்பெருந்தகையின் பேச்சு திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும் என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் செல்வப்பெருந்தகைக்கு மேடையில் வைத்தே பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் தற்போதைய ஈரோடு தொகுதி எம்எல்ஏவும் ஆன ஈவிகேஎஸ் இளங்கோவன். இதுதொடர்பாக மேடையில் பேசிய அவர்," இன்றைக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகமும் திமுக தலைவர் மு க ஸ்டாலினும் தான் என்பதை மறந்து விடக்கூடாது. அன்றைக்கு தனித்துப் போட்டியிட்டபோது கன்னியாகுமரியிலும் சிவகங்கை மட்டும்தான் ஒரு லட்சம் வாக்குகள் கிடைத்தது. ஆனாலும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தோம்.

EVKS Elangovan Congress Mk Stalin Politics

யாருக்குத்தான் இங்கே ஆசை இல்லை.. ஆம் வெற்றி பெற வேண்டும் என்று ஆசை இல்லாமலா இருக்கிறது. ஆனால் ஆசை பேராசை ஆகி விடக்கூடாது. ஆம் வெற்றி பெற வேண்டும் என்பதை விட நமக்கு முன்னால் இருக்கும் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நம் எண்ணமாக இருக்க வேண்டும். அதை விடுத்து நான் தான் தனியாக இருப்பேன்.. நான்தாக தனியாக வெற்றி பெறுவேன் என கூறினால் அது உங்கள் இஷ்டம். நான் யாருக்கும் பகைவன் அல்ல.. உங்களுக்கு இருக்கும் அதே காங்கிரஸ் உணர்ச்சி தான் எனக்கும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் காங்கிரசை காலூன்ற வைத்த பெரியாரின் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் எனக்கும் ஆசை தான். எதிரியை ஒழிக்காமல் அந்த இடத்தை பிடிக்க முடியாது" என பேசினார். அப்போது பொதுக்குழுவில் கலந்து கொண்டிருந்த பலர் இளங்கோவனின் பேச்சை கைதட்டி வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு கோஷ்டிகள் செயல்பட்டு வரும் நிலையில் மாநில தலைவர் தனித்து செயல்பட வேண்டும் என பேசியதும், அதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேராசைப்படக்கூடாது என பேசியது காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+