இந்த மாதிரி மனைவி அமைந்தால் வாழ்க்கை வரம்.. வீடியோவை நீங்களே பாருங்க
சென்னை: மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அது பெரும்பாலானோருக்கு வரமாகவே உள்ளது. அப்படி வரமாக அமைந்தவர்கள் வாழ்க்கை உண்மையில் சொர்க்கம். ஒரு வயதான முதியவருக்கு, அவரது மனைவி குழந்தை போல் சாப்பாடு ஊட்டி விடும் காட்சி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா என ஆயிரம் உறவுகள் உங்களுக்கு இருந்தாலும் இவை அத்தனையும் இரத்த உறவுகள். ஆனால் எங்கிருந்தோ வந்த மனைவி உங்களுக்காகவே வாழ்ந்து உங்கள் இல்லறத்தில இரண்டர கலந்து மடிவார்கள். அந்த காதலையும் அன்பையும் வேறு யாராலும் நிரப்ப முடியாது.

திருமணம் ஆன புதிதில் மனைவியை குழந்தை போல் பார்த்துக்கொண்டால் முதுமையில் தாய் போல் உங்களை அதே மனைவி பார்த்துக் கொள்வார் என்று சொல்வார்கள். அது எவ்வளவு நிஜம் என்பதை இந்த வீடியோவில் பார்த்தால் தெரியும்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்வு அற்புதமானது. ஒருவருக்கு ஒருவர் போட்டிபோட்டு விட்டுக்கொடுத்து அன்பை பரிமாறி காதலுடன் வாழ்ந்தால் வாழ்க்கை வரமாக இருக்கும்.
இளமையில் கணவன், மனைவிக்காக வாழ்ந்தால், முதுமையில் அவளுக்கு கணவன் சுமையாக தெரிய மாட்டான். நிச்சயம் இந்த வீடியோ பார்ப்போரை நெகிழ வைக்கும். நீங்களே பாருங்கள். ஒரு வயதான முதியவருக்கு, அவரது மனைவி குழந்தை போல் சாப்பாடு ஊட்டி விடுகிறார்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... pic.twitter.com/Gm6BeByFNl
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) July 6, 2023
இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாழ்க்கை வாழ்ந்து தான் மறைய வேண்டும் என்று நெகிழ்கிறார்கள்.கணவன் மனைவியாக வாழாமல் நண்பர்கள் போல் வாழ்ந்தவர்கள் தான் இறுதி காலத்தில் இப்படி இருப்பார்கள் என்று நெகிழ்கிறார்கள். மனைவி என்பவள் இளமையில் தாரமாகவும் முதுமையில் தாயாக இருப்பாள். ஒருவேளை அவளை இழந்து முதுமையை வாழ வேண்டும் என்றால், உண்மையில் அது அவர்கள் வாழ்வில் நரகமாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
மனிதர்கள் வாழ்வில் என்ன சம்பாதித்தாலும், எத்தனை பேர் புகழுடன்இருந்தாலும், எல்லாமே இருந்தாலும் , மனைவியை இழந்துவிட்டால் வாழ்க்கையில் பாதி நடைபிணமாகிவிடுவார்கள் என்று நெட்டிசன்கள் உருக்கமாக கூறுகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications