சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஐயா வேலை கொடுங்க'.. திடீரென அமைச்சரின் காலில் விழுந்த பெண்.. நம்பிக்கை கொடுத்த அமைச்சர்!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் திடீரென அமைச்சர் தா.மோ. அன்பரசன் காலில் விழுந்து வேலை கேட்ட பெண்ணால் பரபரப்பு ஏறப்டடது. ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.

இந்த முகாமை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். ஐயப்பன்தாங்கல் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கண், தோல், சர்க்கரை வியாதி உள்ளிட்ட அனைத்து விதமான உடல் பரிசோதனையையும் இலவசமாக செய்து கொண்டனர்.

A woman fell at tamilnadu minister thamo anbarasan feet and asked to work in tamilnadu

அமைச்சர் தா.மோ. அன்பரசன் மருத்துவ முகாமை பார்வையிட்டு அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்ததால் பரபரப்பு எற்பட்டது,. அப்போது அந்த பெண், ''எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நான் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன். எனக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டும் . அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து உள்ளேன்.

ஆனால் அரசு வேலை கேட்டு அனுகினால் அதிக அளவில் பணம் கேட்கிறார்கள் என்று அந்த பெண் கண்ணீர்மல்க கோரிக்கை விட்டுத்தார் . அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த கன்னிகாஸ்ரீ (38) என்பது தெரியவந்தது. ஆதரவற்ற நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் இருப்பதாக அந்த பெண் உருக்கமுடன் கூறினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெண்ணிடம் இருந்து மனுவை பெற்று கொண்டார்.

 வெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள் வெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள்

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அந்த பெண்ணிடம் உறுதி அளித்தார். இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிபடைத்து வரும் கொரோனா நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக சரித்து விட்டது. இதன் காரணமாக காரணமாக ஏராளமானோர் வேலையை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Chennai, a woman fell at tamilnadu minister thamo anbarasan feet and asked to work. The Minister assured the woman that appropriate action would be taken in this regard
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X