Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறி மாறி போட்டோதான் எடுக்குறீங்க! சாப்பாடே வேண்டாம்! வேளச்சேரி வெள்ளம்.. அண்ணாமலையிடம் சீறிய பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெண் ஒருவரும் பின்னர் அங்கிருந்த பொதுமக்களும் கோபமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று உணவு கொடுத்து வருவதாக பாஜக தெரிவித்துள்ளது.

A woman got angry with BJP Chief Annamalai for taking photos amid Chennai Flood

வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில், முழங்கால் அளவு வெள்ள நீரில் நடந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள், பிரெட் போன்றவை வழங்கப்பட்டன.

அண்ணாமலையை மறித்த பெண்: இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெண் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில்.. பெண் ஒருவர் அண்ணாமலையிடம்.. நாங்க சொல்றதை எங்கயாவது கேட்குறீங்களா ? யாரவது நின்று எங்கள் பேச்சை கேட்குறீங்களா? நீங்க பாருங்க நான் கொடுத்த கோரிக்கையை கூட படிக்கவில்லை. ஆனால் கிளம்பி செல்கிறீர்கள்.

மாறி மாறி நீங்கள் போட்டோதான் எடுக்கிறீர்கள். என்னுடைய பிரச்னையை உங்களிடம் சொல்ல வருகிறேன் ஆனால் கேட்காமல் உள்ளீர்கள் என்று அந்த பெண் கூறியுள்ளார். அதை கேட்டு அண்ணாமலை.. நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். அப்பறம் பேசலாம். உங்களுக்காக சாப்பாடு கொண்டு வந்திருக்கிறோம்.

உங்களுக்காக சாப்பாடு இருக்கிறது. முதலில் அதை சாப்பிடுங்கள். அப்பறம் கட்சி நிர்வாகிகள் உங்களிடம் கோரிக்கைகளை கேட்பார்கள். கண்டிப்பாக உங்களிடம் கட்சி நிர்வாகிகள் பேசுவார்கள் என்று கூறியுள்ளார்.

சாப்பாடு வேண்டாம்: இதை கேட்ட அந்த பெண்மணி நாங்கள் வைக்கும் கோரிக்கையை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். ஆனால் இப்போது சாப்பாடு மட்டும் போடுவீர்களா.. உங்கள் சாப்பாடும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்.. நீங்கள் செல்லுங்கள்., என்று கடுமையாக பேசி உள்ளார்.

இளைஞர் கோபம்: அங்கே இருந்த இளைஞர் ஒருவர்.. வெறும் 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வருகிறார்.. எப்படி பத்தும். இங்கே 1500 வீடுகள் இருக்கு. 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வந்துட்டு நான் உதவி செஞ்சிட்டேன் அப்படின்னு சொல்லிக்கிறாங்க?

இது எல்லாம் எப்படிங்க போதுமாக இருக்கும்? நீங்களே சொல்லுங்கள். இங்கே அத்தனை பேர் சாப்பிடம்ல் இருக்கோம். ஆனால் இவங்க பாருங்க போட்டோ எடுக்குறாங்க, என்று கோபமாக பேசி உள்ளார்.

சென்னை வெள்ளம்: பொதுவாக சென்னையில் நேற்று முதல்நாள் பெய்தது போல எல்லாம் மழை பெய்து இருந்தால் சென்னை 4-5 நாட்களுக்கு மிதந்து இருக்கும். சென்னையே மொத்தமாக முடங்கி இருக்கும். ஏனென்றால் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.

இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+