கிண்டியில் நடுரோட்டில் கொடூரம்.. பெண்ணை கொன்ற இளைஞர்.. கொலைகாரன் மாயம்.. இதுதான் பின்னணி!
கிண்டியில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னை கிண்டியில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிண்டியில் நேற்று நடுரோட்டில் கொடூர கொலை ஒன்று நடந்து இருக்கிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் பல பரபரப்பு விஷயங்கள் வெளியாகி உள்ளது.
கிண்டியில் இருக்கும் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்தான் ரேவதி. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ரேவதியின் கணவர் 4 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.

என்ன பிரச்சனை
இந்த நிலையில் ரேவதியின் மகள் ஜீவிதாவிற்கு கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. சென்ற வருட இறுதியில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து இருக்கிறது. ஆனால் திருமணம் திடீர் என்று நிறுத்தப்பட்டது.

போலீசில் புகார்
ஆனால் வினோத், தனக்கு ஜீவிதாவைதான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து பிரச்சனை ஏற்படவே ரேவதி வினோத் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து வினோத்தும், ஜீவிதாவும் நட்பில் இருந்துள்ளனர். இதனால் வினோத் மீண்டும் பெண் கேட்டு ரேவதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

கொலை செய்தார்
ஆனால் ரேவதி தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து நேற்று இரவு ரேவதி பணியை முடித்துவிட்டு கிண்டி அருகே வரும் போது, வினோத் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். நண்பர்களுடன் வந்த வினோத் ரேவதியுடன் சண்டையிட்டு உள்ளார். பின் அதே இடத்தில் ரேவதியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்.

யார் செய்தது
இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே பலியானார். முதலில் இந்த கொலையை யார் செய்தது என்ற விவரம் தெரியவில்லை. அதன்பின் போலீசார் ஜீவிதாவிடம் நடத்திய விசாரணையில் வினோத்தான் கொலையை செய்தது என்பது தெரியவந்துள்ளது. தற்போது தப்பி ஓடிய வினோத் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications