ஏன்டா அறிவில்ல.. படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை இழுத்துப் போட்டு அடித்த பெண்.. அரண்ட சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அரசு பேருந்தில் படியில் அபாயகரமாக தொங்கி சென்ற சிறார்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, இப்படி எல்லாம் செய்யக்கூடாது எனறு கடுமையாக எச்சரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பேருந்து ஒட்டுநரை எச்சரிக்கும் அந்த பெண், அடுத்து செய்த விஷயங்கள் இன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

A woman who gave special treatment to students who traveled by bus in Chennai

சென்னையை பொறுத்தவரை அரசு பேருந்துகளில் புட்போர்டு அடிக்கா விட்டால், சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அன்றைக்கு தூக்கமே வராது. பேருந்துகளில் ரூட்டு தல என்ற பெயரில் மோதிக் கொள்வது, அபாயகரமான முறையில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வது போன்றவை தினமும் நடக்கிறது.

போலீஸார் யாராவது வந்தால் மட்டும் மாணவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்.. அவர்கள் போன பின்னர் மீண்டும் சேட்டையை ஆரம்பிக்கிறார்கள். அரசு பேருந்துகளில் மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில் ஆட்டம் போடுவது அடிக்கடி நடக்கும்.இது ஒருபுறம் எனில், சென்னையில் ஒரு குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கும், இன்னொரு கல்லூரி மாணவர்களுக்கும் பல வருடமாக தொடர்கிறது பகை.. அது ஏன் என்றே இன்று வரை தெரியவில்லை.. குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களின் மோதல் என்பது எனக்கு தெரிந்து 90களில் இருந்தே பாரம்பரியமாக தொடர்கிறது. இதேபோல் ரூட்டு தல என்ற பெயரில் மோதுவது இன்று வரை குறையவில்லை.

இது தவிர சென்னையின் அரசு பேருந்துகளில் பெண்கள் முன்பு சீன் போட வேண்டும் என்ற நோக்கில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் அதிகம். இதேபோல் பேருந்து படிக்கடில் சாகசம் செய்தால் தான் அவர்களை மற்றவர்கள் பார்த்து மிரளுவார்கள் என்ற எண்ணமும் ஆழமாக இருக்கிறது. மேலும் சாகசமாக செல்வதும் அவர்களுக்கு பிடித்திருக்கிறது.

A woman who gave special treatment to students who traveled by bus in Chennai

மேலே சொன்ன இந்த மூன்று காரணங்களால் மாணவர்கள் படியில் தொங்கியபடியும் பேருந்தின் ஜன்னல்களில் ஏறியும் ஆபத்தாக பயணிக்கிறார்கள். சாகசம், சண்டை, கெத்துக்கு ஆசைப்பட்டு என்று சில மாணவர்கள் செய்யும் சேட்டைகளை டிரைவர், கண்டக்டர்கள் தட்டிக்கேட்டால் அவர்களுடன் சண்டைக்கும் தயாராக உள்ளனர். இதனால் அவர்கள் அதனை கண்டுகொள்வது இல்லை. பொதுமக்கள் வாயை திறந்தாலே அடிப்பார்களே என்று பயந்து கேட்பதும் இல்லை. அவ்வப்போது போலீஸ் தான் சரியான ட்ரீட்மெண்ட் கொடுத்து ஒழுங்குபடுத்துவார்கள்.

இந்நிலையில் சென்னையில் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை பெண் ஒருவர் தட்டிக்கேட்டு அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சென்னையில் அண்மையில் ஒரு அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கிட்டில் ஆபத்தாக நின்றதுடன், படிக்கட்டு அருகே உள்ள ஜன்னலில் ஏறி ஆபத்தாக பயணித்தார். சில வினாடிகள் சுதாரிக்காவிட்டால் கீழே விழுந்து படுகாயம் அடைந்திருப்பார்.

A woman who gave special treatment to students who traveled by bus in Chennai

நல்ல வேளையாக ஒரு பெண், திடீரென பேருந்தை மறித்து டிரைவரை சரமாரியாக கேள்வி எழுப்பினார். பேருந்தில் இப்படி பயணிப்பவர்களை செருப்பால் அடித்திருக்கலாமே என்று ஆவேசத்துடன் கேட்டார். பின்னர் நேராக பேருந்தின் பின் வாசலுக்கு சென்று, படியில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்களை கண்ணத்தில் அறைந்தார். கண்ணத்தில் சராமரியாக அந்த பெண் மாணவர்களை அறைந்ததால், சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இப்படி படியில் தொங்கக்கூடாது என்று எச்சரித்து அவர்களை அந்த பெண் அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இப்படி அடித்த பெண்ணை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

கன்னத்தில் சராமரியாக அந்த பெண் பாஜக பிரமுகர் என்றும் நடிகை என்றும் கூறப்படுகிறது. இவர் இப்படி போலீஸ்காரர் போல மாணவர்களை அறைந்ததால், சுற்றி இருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இப்படி படியில் தொங்கக்கூடாது என்று எச்சரித்து அவர்களை அந்த பெண் அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இப்படி அடித்த பெண்ணை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் அடிக்க இவருக்கு யார் உரிமை தந்தது என்ற எதிர் குரல்களும் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+