3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு போன ஸ்டெல்லா.. நடந்த விபரீதம்
சென்னை : சென்னையில் காதல் கல்யாணம் செய்த பெண் மூன்றே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி காதல் மூன்று மாதத்தில் கசந்து போனதால் இளம் பெண் உயிரை மாய்த்து கொண்டிருப்பது பல்லாவரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பழைய பல்லாவரம் அடுத்த சுபம் நகர் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் அவருடைய மகன் வெங்கடேசன்5(23) இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துள்ளார்.
இவர் கல்லூரி படிக்கும்போது அதே கல்லூரியில் படித்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா(23) என்பவரும் சுமார் மூன்று வருடம் காதலித்து வந்துள்ளனர்.

பெற்றோர் சம்மதம்
இதையடுத்து இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் மூன்று மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது.. பின்னர் வெங்கடேசன் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளார்கள்.

ஸ்டெல்லா தற்கொலை
இந்நிலையில் நேற்று ஸ்டெல்லா குளித்து விட்டு படுக்கை அறையினுள் சென்றுள்ளார். பல மணி நேரம் ஆகியும் வெளியில் வராததால் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகப்பட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஸ்டெல்லா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

உடலை மீட்டனர்
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷன் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன
இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி மூன்றே மாதத்திற்குள் இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவரவில்லை.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications