39 வயதில் ரிடையர்மென்ட்.. பென்சன் மட்டும் ரூ. 1.60 கோடி.. சேமிப்பு எவ்ளோனு கேட்டா தலையே சுத்துதே
சென்னை: மல்டி நேஷனல் கம்பெனிகளில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் 1.60 கோடி ரூபாய் பென்சனுடன் 39 வயதிலேயே தன்னுடைய ரிடையர்மென்டை அறிவித்துள்ளார். இவர் ஓய்வை அறிவித்த பின்னும் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வரை வருவாயைப் பெறப் போகிறாராம்.
அமேசான் நிறுவனத்தில் ஜமால் ராபின்சன் என்பவர் தன்னுடைய 16 வயதிலேயே ஜெனிட்டர் பொறுப்பில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தனக்கு 45 வயதாகும் போது ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்பது தான் இவருடைய இலக்கு. இந்த இலக்கை தன்னுடைய 17 வயதிலேயே நிர்ணயித்துவிட்டார் ஜமால்.

அமேசான், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், இண்டெல் போன்ற பெரு நிறுவனங்களில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்துள்ளார். இப்போது ஜமாலுக்கு 39 வயது. இந்நிலையில், தன்னுடைய இலக்கை 6 வருடத்துக்கு முன்பே எட்டிவிட்டதால் தற்போது தனது ஓய்வை அறிவித்து ஜமால் ஷாக் கொடுத்துள்ளார்.
ஆண்டு வருமானமாக 9.63 கோடி ரூபாய் சம்பாதித்து வரும் நிலையில் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து ஜமால் கூறுகையில், எனக்கு பணத்தின் மதிப்பு நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனது நண்பர்கள் சிலர் 200 டாலர் மதிப்புள்ள ஷூக்களை வாங்கி அணிவார்கள். அப்போதெல்லாம் இதுபோன்ற விலை உயர்ந்த ஷூக்களை வாங்கி அணிய எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டுமோ என்று நான் நினைத்து ஆதங்கப்பட்டிருக்கிறேன். அதையெல்லாம் மனதில் வைத்து தான் ஒவ்வொரு முறை சம்பள உயர்வு பெறும்போதும் எனது சேமிப்பை சம்பள உயர்விற்கேற்ப அதிகரித்துக் கொண்டே இருந்தேன்.
எனக்கு சம்பள உயர்வு வரும்போதெல்லாம் அதில் இருந்து 30 சதவீதம் முதல் 50 சதவீதம் தொகையை சேமிப்புக்கு என ஒதுக்கிவிடுவேன். அதன் பின்னர், அந்த தொகையை 80 சதவீதமாக உயர்த்தினேன். பின்னர், எனது சம்பளத்தின் 90 சதவீத தொகையை சேமிப்புக்கென்று மட்டுமே ஒதுக்கியதால் எனது இலக்குக்கு முன்னதாக நான் ஓய்வு பெற முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ரிடையர்டான ஜமால் ராபின்சஸ், தன்னுடைய வங்கிக் கணக்கில் சேமிப்பாக மட்டுமே ரூ. 30.65 கோடிக்கும் மேல் வைத்துள்ளாராம். துபாயில் வசித்து வரும் இவருக்கு ஓய்வுத் தொகை மட்டும் ஆண்டுதோறும் ரூ. 1.62 கோடி கிடைத்து வருகிறது. சேமிப்பு, முதலீட்டை சரியாக திட்டமிட்டுள்ளதால், ஓய்வு பெற்ற பின்னரும் ஒரு மில்லியன் டாலர் வரை என்னால் வருவாய் ஈட்ட முடியும் என்று கூறி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications