அப்பாவுக்கு 5 கல்யாணம்..! 6வது கல்யாணத்துக்கு தயாரான மகன்! இது வேற இருக்கா? கொத்தாக தூக்கிய போலீஸ்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் ரயில்வே வேலை வாங்கி தருவதாக 5 பெண்களிடம் பழகி திருமணம் செய்த இளைஞர் நகை பணத்தை மோசடி செய்த நிலையில், அவரை பிடித்து விசாரணை செய்தபோது சென்னையில் உள்ள அவருடைய தந்தையும் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 41 வயதான ஸிஜீஷ் என்பவர் கடந்த பல மாதங்களாக கேரளாவில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பல பெண்களை சந்தித்து உங்களுக்கு சென்னையில் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி நம்ப வைத்துள்ளார்.

மேலும் அந்தப் பெண்களிடம் நெருங்கி பழகி திருமணம் செய்து கொண்டு பணம் நகை இவற்றை பறித்து கொண்டு , திருமணமான மூன்று மாதம் வரை இவர் அந்த பெண்களுடன் வசித்து வருவார் பின்பு காணாமல் போய்விடுவார்.

5 பெண்களிடம் மோசடி

5 பெண்களிடம் மோசடி

கடந்த மாதம் பாலக்காடு அருகே உள்ள அகத்தேதரா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணை சந்தித்து உங்களுக்கு சென்னை ரெயில்வே நிர்வாகத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என கூறி அவரரிடம் இருந்து பணம் நகைகளை பெற்றுள்ளார். பின்பு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறி நம்ப வைத்தார்.

திடீரென மாயம்

திடீரென மாயம்

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த பெண்ணிற்கு எந்த தகவலும் வரவில்லை. சந்தேகமடைந்த அவர் பாலக்காடு ஹேமா அம்பிகை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை மேற்க்கொண்ட போலீசார் செல்போன் எண்களை பயப்படுத்தி சைபர் செல் மூலம் தேடி வந்தார்கள்.

அதிரடி கைது

அதிரடி கைது

அப்போது அவர் பாலக்காடு அருகே இருப்பது தெரியவந்தது. போலீஸார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது மேலும் ஐந்து பெண்களை இது போல் ஏமாற்றியது போலீசாருக்கு தெரியவந்தது.

போலீசார் அதிர்ச்சி

போலீசார் அதிர்ச்சி

மேலும் விசாரணை செய்தபோது சென்னையில் உள்ள இவருடைய தந்தையும் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து உள்ளது பாலக்காடு போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. போலீசார் வாலிபரை கைது செய்து பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+