அதிர்ச்சி.. இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்க முடியாது.. இபிஎப்ஓ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது.

நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில் ,குறிப்பிட்ட தொகை நமது பிஎப் கணக்கிற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை இப்படி மாதம் மாதம் நமது பிஎப் கணக்கில் சேரும்.

Aadhaar card can not be accepted as the birth certificate anymore says EPFO

இபிஎப்ஓ பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில் நம்முடைய பிஎப் கணக்கை குறிப்பிட்டு நாம் நம்முடைய தொகை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த பிஎப் கணக்கில் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.

பிஎப்: தேவைப்படும் பட்சத்தில் இடைப்பட்ட நேரத்தில் கூட இந்த பிஎப் தொகையை எடுத்துக்கொள்ள முடியும். அவசர தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு இந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். பிஎப் போக ரிட்டயர்மெண்ட் தொகையும் இதேபோல் வழங்கப்படும். ஆனால் அதை குறிப்பிட்ட வயதிற்கு பின்பே எடுக்க முடியும்.

இந்த நிலையில்தான் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஏற்படுத்திக்கொடுத்து உள்ளது. அதன்படி அதிக ஓய்வூதியத்தைப் பெற 1995-ன் (EPS-1995) கீழ், தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

லிஸ்ட்: அதிக ஓய்வூதியத்தைப் பெற 1995-ன் (EPS-1995) கீழ் உள்ள லிஸ்டில் வருபவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். முன்பு இதற்கான கடைசி தேதி மார்ச் 3ம் தேதி வரை இருந்தது. ஆனால் மக்கள் பலர்.. நாங்களும் அதிக ஓய்வூதியம் பெற விரும்புகிறோம். ஆனால் தேதி முடிந்துவிட்டது. எனவே தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதியை மே 3, 2023க்கு மத்திய அரசு மாற்றி உள்ளது. ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஜாக்பாட் அறிவிப்பு போல இது வந்துள்ளது. 2014ல் இருந்து ஓய்வூதிய வருமான வரம்பு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது முன்பு 6500 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டை: இந்த நிலையில்தான் இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது.

அதன்படி இனி பிறப்பு ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கொடுக்க கூடாது. அதை கொடுத்துள்ளவர்கள் உடனே பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் மட்டுமே பிறப்பு சான்றாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இன்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும்.

ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.

மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+