ஆதார் தரவுகளை யார் கிட்டயும் ஷேர் செய்ய முடியாது... லேசுபட்டதில்லை.. ஹைகோர்ட்டில் ஆணையம் திட்டவட்டம்
சென்னை: இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது சாத்தியமற்றது என்று ஹைகோர்ட்டில் ஆதார் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விரிவான பதில் ஒன்றை ஹைகோர்ட்டில் அளித்திருக்கிறது. அந்த பதிலின் முழுவிவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.
அடையாளம் தெரியாத இறந்த நபர் ஒருவரின் அடையாளத்தை கண்டறிவதற்காக அவரது கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

ஆதார் ஆணையம்
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது இந்த வழக்கில் ஆதார் ஆணையத்தின் துணை இயக்குநர் பிரியா ஸ்ரீகுமார் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் உள்ள விவரம் இதுதான்:
"நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவைகள் போன்றவற்றை, உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல் சட்ட பிரிவுகளின்படி, 2016ல், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கப்பட்டது. இது, ஒரு சட்டப்பூர்வ ஆணையம். இந்த ஆணையம் வாயிலாக, இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், 'ஆதார்' என பெயரிப்பட்ட, யு.ஐ.டி., எனும் ஒரு தனித்துவ அடையாளமாக, 12 எண்கள் வழங்கப்படுகின்றன.
தனித்துவ அடையாள ஆணையம்
இந்தியாவில் வசிக்கும் குடிமகன்களை முறையாக கணக்கிட்டு அவர்களுக்கு நிதி மற்றும் அரசின் பிற மானியங்கள், சேவைகள் உண்மையான பயனாளிகளுக்கு வெளிப்படையாக சென்றடையும் வகையில் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் எண்களுடன் சட்ட ரீதியிலான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த 2016-ல் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி தனி நபர்களின் பிரத்யேக ஆதார் தொடர்பான சேகரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட அடையாளங்கள் மற்றும் பயோ மெட்ரிக் தகவல்களை வேறு எந்த காரணங்களுக்காகவும் மற்றவர்களுக்கு பகிர இயலாத அளவுக்கு சட்ட ரீதியாக கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
கண்காணிப்பது நோக்கம் இல்லை
அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்காக தனிநபர் குறித்த விவரங்களை உறுதி செய்வதே ஆதாரின் நோக்கமேயன்றி, தனிநபர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது ஆணையத்தின் நோக்கம் அல்ல. அதேபோல அடையாளம் தெரியாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பரிசோதித்துப் பார்க்கவும் இயலாது.
உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த நபரின் கருத்தை கேட்ட பின், விபரங்கள் பகிரப்படும். அதுவும், தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக மட்டுமே. மத்திய அரசின் செயலர் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரியால் அல்லது அரசின் உத்தரவு வாயிலாக சிறப்பு அங்கீகாரம் பெற்றிருந்தால் மட்டுமே விபரங்கள் பகிரப்படும்.
சாத்தியமற்றது - இயலாதது
தடயவியல் பரிசோதனைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனிநபரது கருவிழி மற்றும் கைரேகை தகவல்களை ஆணையம் சேகரிப்பதில்லை என்பதால் இறந்து போன நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது, இறந்த போன ஒரு நபரின் கைரேகையை, ஆதார் கைரேகையுடன் ஒப்பிட்டு, வழக்கில் மனுதாரர் கோரும் தகவல்களை வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது. அது இயலாததும்கூட.
எனவே, யுஐடிஏஐ அமைப்பால் சட்டப்பூர்வ உத்தரவையும், தனியொருவரின் அடிப்படை உரிமையையும் மீறுவது இயலாதது என்பதால், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications