அரசாங்கமே கைவிட்டால்? ஆதார் கார்டு, ரேஷன் அட்டையை திரும்ப தந்துடறோம்: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
சென்னை: புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வேலை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.. இந்நிலையில், மானிய கோரிக்கையில், தங்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. அரசாங்கமே எங்கள் மீது கருணை காட்டாவிட்டால் வேறு யார் எங்கள் மீது கருணை காட்டுவார்கள் என்று ஏற்கனவே இவர்கள் நொந்து போய் சொல்லியிருந்தனர். இப்போதாவது தங்கள் கோரிக்கை நிறைவேறுமா? என்று ஆதங்கத்துடன் எதிர்நோக்க உள்ளனர்.
புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வேலை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்..

பார்வையற்ற மாற்று திறனாளிகள்
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று, சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை அலுவலகம் முன்பு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கடந்த 17ம் தேதி முதல், 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிறகு கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார்கள். ஆனால், எந்தவிதமான தீர்வும் அதில் கிடைக்கவில்லை. எனவே, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்..
காவல்துறையின் அடக்குமுறை
இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் பொதுச்செயலர் பாபு எழில்குணாளன் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், ''10 நாட்களாக போராடியும் உரிமைகள் மறுக்கப்படுவது வேதனையாக உள்ளது. அதிகாரிகளின் அலட்சியம், காவல்துறையின் அடக்குமுறை என, பலகட்ட இன்னல்களுக்கு இடையே போராட்டம் நடந்தது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, கூடுதல் கவனம் தர இயலாது என்று சொல்லும் அதிகாரிகளை கண்டித்து, எங்கள் உரிமைகளை பெறும் வகையில், விரைவில் அடுத்தகட்ட போராட்டத்தை துவக்க உள்ளோம் என்று கூறியிருந்தார்.
மீண்டும் கோரிக்கைகள்
இந்நிலையில், நடந்து வரும் மானிய கோரிக்கையில், தங்களது கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் தமிழக பொதுச்செயலர் பாபு எழில் குணாளன் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:
"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில், புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்தோர் மற்றும் பட்டப்படிப்பு மற்றும் அரசு சான்றிதழ் படிப்புகளை நிறைவு செய்தோருக்கு, அரசு வேலை வேண்டி, கடந்த மாதம், 17ம் தேதி முதல் பத்து நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை...
எழுதுபொருள், அச்சுத்துறை
இதுதொடர்பாக துறை செயலாளருடன் நடந்த பேச்சுக்கு பிறகு, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம். இப்போது, "எழுதுபொருள், அச்சுத்துறையில், புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு வேலை இல்லை" என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.. அதனால், அரசு பல்கலை மற்றும் கல்லுாரிகளில் செயல்படும் பொது நுாலகம் மற்றும் ஆவணக் காப்பகங்களில் வேலை வழங்க வேண்டும். உதவித்தொகையை, 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
ரேஷன் கார்டுகள், ஆதார் கார்டுகள்
துறை சார்பில் வழங்கப்பட உள்ள, "டெலி மெடிஷன்" பயிற்சிக்கு மாறாக, மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, தொழில் பயிற்சி வழங்க வேண்டும். அதேபோல், பஸ் ஸ்டாண்டு கழிப்பறை பராமரிப்புக்கான டெண்டர், வரும் காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, துறை செயலரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
அதனால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின்போது, எங்களது கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக, ஆதார், ரேஷன் கார்டுகளை நலத்துறையிடமே ஒப்படைத்துவிடுவோம்.. தொடர்ந்து போராட்டங்களிலும் ஈடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications