ஆதார் அட்டையில் இனி உங்கள் பெயர் இருக்காது: கார்டு ரூல்ஸ் மாறுதா? இதை உடனே செய்யாவிட்டால் செல்லாது
சென்னை: இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக திகழ்கிறது.. தற்போதைய சூழலில் வங்கிச் சேவைகள் முதல் அரசின் நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சில அதிரடி மாற்றங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இது குறித்த சுருக்கமாக இங்கே காண்போம்..
தற்போது புழக்கத்தில் இருக்கும் ஆதார் அட்டைகளில் ஒருவருடைய பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் தந்தை பெயர் போன்ற அனைத்து விவரங்களும் வெளிப்படையாக அச்சிடப்பட்டுள்ளன..

ஆதார் அட்டை
நாம் ஏதேனும் ஒரு தேவைக்காக ஆதார் அட்டையின் நகலை மற்றவர்களிடம் கொடுக்கும்போது, அதில் உள்ள நமது தனிப்பட்ட விவரங்கள் எளிதாக திருடப்படவோ அல்லது தவறாக பயன்படுத்தப்படவோ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.. இந்த தரவு பாதுகாப்பு சிக்கலை தீர்ப்பதற்காகவே புதிய மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
புதிய திட்டத்தின்படி, இனி வரவிருக்கும் ஆதார் அட்டைகளில் ஒருவருடைய புகைப்படம் மற்றும் க்யூஆர் கோடு மட்டுமே பிரதானமாக இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஆதார் கார்டு பெயர்
பெயர், முகவரி போன்ற எழுத்து வடிவிலான விவரங்கள் அட்டையில் நேரடியாகத் தெரியாத வகையில் மாற்றியமைக்கப்படலாம் என கூறப்படுகிறது..
இதன் மூலம், ஒருவரிடம் நமது ஆதார் அட்டையைக் காட்டினாலும், அவர்கள் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே நமது விவரங்களைப் பார்க்க முடியும் என்ற பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.. இது தேவையற்ற நபர்கள் நமது தனிப்பட்ட தகவல்களை அறிந்துகொள்வதைத் தடுக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது..
அத்துடன் ஆதார் ஆணையத்தின் இந்த முயற்சி சைபர் குற்றங்களைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை வைத்து நடைபெறும் பணமோசடிகள் மற்றும் போலி அடையாள அட்டைகள் தயாரிப்பு போன்ற சட்டவிரோதச் செயல்கள் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது..
க்யூஆர் கோடு முறையில் விவரங்களை சரிபார்ப்பது பாதுகாப்பானதாக இருப்பதால், நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது..
பயோமெட்ரிக்
இந்த மாற்றங்கள் தவிர, ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு வலியுறுத்தி வருகிறது.. கைரேகை மற்றும் கண் கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்களை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலம் அடையாளத் தவறுகள் ஏற்படாமல் காக்க முடியும்.. தற்போது இந்த புதிய அட்டை வடிவம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தெளிவான வழிகாட்டுதல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..
இன்றைய டிஜிட்டல் உலகில் தரவுப் பாதுகாப்பு என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது.. மக்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாப்பதில் இந்த புதிய ஆதார் அட்டை வடிவமைப்பு முக்கியமான படியாக அமையலாம் என கூறப்படுகிறது.. இத்தகைய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், பொதுமக்கள் தங்கள் அடையாள ஆவணங்களை மேலும் பாதுகாப்பாக பயன்படுத்தும் சூழல் கண்டிப்பாக உருவாகும்...!!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications