நீங்க இன்னும் "இதை" செய்யவில்லையா? வீட்டிற்கே வரும் டீம்.. தமிழ்நாடு மின்வாரியத்தின் மேஜர் உத்தரவு
ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும்.
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில் இதுவரை இந்த இணைப்பை மேற்கொள்ளாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
ஆதார் கார்டு இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்தியாவில் மிக முக்கியமான அடையாள அட்டையாக இந்த ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்டு அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

மின்சார அட்டை
இன்னொரு பக்கம் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் நிலவி வருகிறது. ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மின்சார கணக்கில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்படுவது தவறு. ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை. மற்றபடி நேரில் கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை இல்லை. ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களை கொடுக்கலாம்.

ஆதார் அட்டை
வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம்.ஆனால் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும். நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். அதாவது நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கையும் நீக்க முடியும். புதிதாக அந்த வீட்டிற்கு வருபவர்கள் கணக்கை சேர்த்துக்கொள்ள முடியும். இதுதான் விதி. இதற்காக நேரடி முகாம்கள் நடந்து வருகின்றன.

ஏன் முக்கியம்
மானியம் பெறும் பயனர்களை கண்டறிய ஆதார் விவரம் தேவை என்பதால், அதற்காக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்காக ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியில் முடிந்துவிட்டது.தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் இருக்கின்றனர். இதில் 67 ஆயிரம் பேரை தவிர மற்ற எல்லோரும் ஆதாரை இணைத்துவிட்டனர். முன்னதாக இதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜனவரி 31 வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

பிப்ரவரி
அதன்பின் பிப்ரவரி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது கால அவகாசம் முடிந்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில் இதுவரை இந்த இணைப்பை மேற்கொள்ளாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி இவர்களின் விலாசம் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். நேரடியாக இவர்கள் வீடுகளுக்கு சென்று ஏன் இணைக்கவில்லை என்று விசாரித்து.. உரிய காரணம் இல்லாதவர்களின் கணக்குகளை இணைக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications