ஆதவ் அர்ஜுனாவிற்கு பல பெண்களுடன் தொடர்பு.. கார்கள் பரிசளிப்பு.. சார்லஸ் மார்ட்டின் விமர்சனம்
சென்னை: லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் சார்லஸ் மார்ட்டின் தனது மைத்துனர் ஆதவ் அர்ஜுனா குறித்து சில கடுமையான விமர்சனங்களை வைத்தார்.. திருமணம் கடந்த உறவில் சில பெண்களுடன் இருந்துள்ளார் என்றும் நிறைய பெண்களுடன் தொடர்பு உண்டு என்றும் கார்களை பரிசளித்தார் என்றும் குடும்பத்தை ஒழுங்காக நடத்த துப்பு இல்லாதவர் என்றும் கடுமையாக விமர்சித்தார்
சென்னை வில்லிவாக்கம் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், " உங்களுக்கு தெரிந்த எதிர்வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் நான்.. எங்கள் குடும்பம் செய்த தவறை யாரும் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே வந்துள்ளேன்..

அமைதிப்படை நாகராஜ சோழன் எம்ஏ
அண்ணண் எஸ்.ஆர்.விஜயகுமாருக்காக திருச்சியில் இருந்து வந்து வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.. "அந்த மாதிரி ஒரு மொள்ளமாரியை அம்மாவாசையை யாருமே பார்க்க முடியாது. அமைதிப்படை வரும் போது எனக்கு சிறுவயது. நான் ரசித்துள்ளேன்... சத்யராஜ் அவர்கள் நடிக்கும் போது இப்படி ஒரு கேரக்டர் இருக்க முடியுமா என்று யோசித்தேன்.. ஆனால் இன்றைக்கு உண்மையான அமைதிப்படை சத்யராஜ் ஆக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா.. அமைதிப்படையில் நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ தான் ஆதவ் அர்ஜுனா.. அவர் வாயை திறந்தால் பொய், சொந்த தாய் உள்பட அனைத்திலுமே அரசியல் பண்ணக்கூடிய தீயசக்தி நபர். தவெகவை அழிக்க வந்த திமுகவின் பிடீம்" என்று கூறினார்.
என் தங்கையை திருமணம் செய்ததால் பணக்காரர்
அதேபோல் மேலும் த.வெ.க.,வின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா பற்றி கூறும் போது, ஆதவ் கஷ்டப்பட்டெல்லாம் வசதிபடைத்த நிலைக்கு வரவில்லை. என் தங்கையை திருமணம் செய்து கொண்டார். அதன் பின், பணக்காரர் ஆகினார். இதிலிருந்தே, அவர் எப்படி பணக்காரர் ஆனார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் பரம்பரை பணக்காரர் போல பேசி வருகிறார். குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட தாய், ஜாதி பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது போன்ற, ஒரு பொய்யை கிளப்பி வருகிறார். அதை வைத்து அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார். செந்தில்குமார் என்பதே ஆதவ் அர்ஜுனாவின் இயற்பெயர். ஆனால், அதை ஆதவ் அர்ஜுனாவாக மாற்றி, பெயரிலும் கூட இரட்டை வேடம் போடுகிறார். இதுவும் ஒரு மோசடிதான்.
திமுகவின் பி டீம்
என்றைக்கு எங்கள் குடும்பத்துக்குள் அவர் வந்தாரோ, அன்றிலிருந்தே எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இப்போது, வில்லிவாக்கத்துக்கு வந்திருக்கிறார். அவரெல்லாம் எம்.எல்.ஏ., ஆனால், இங்கிருக்கும் மக்களே ஒன்றுபட்டு வாழ இயலாது . தன்னுடைய இயல்பான குணத்தின்படி, மக்களை துண்டு துண்டாக்குவார். தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்களை சிதற வைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு 'ஸ்லீப்பர் செல்'லாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் போன்ற தீய சக்தியை உங்கள் தொகுதியில் அனுமதித்தால், கூறு போட்டு விற்றுவிடுவார்.
500 கோடி வாங்கி தந்தார்
எங்கள் பணம் 500 கோடி ரூபாயை வாங்கி, தி.மு.க.,வுக்கு நிதியாக கொடுத்தவர் தான் ஆதவ் அர்ஜுனா. அந்த பணத்துக்கு இன்று வரை, முதல்வர் ஸ்டாலினிடம் கணக்கு கேட்டு வருகிறோம். ஆனால், அது குறித்து அவரோ, மகன் உதயநிதியோ, மருமகன் சபரீசனோ எவ்வித பதிலும் சொல்லவது கிடையாது. இன்றைக்கு எங்களை லாட்டரி வாயிலாக சம்பாதித்தோர் என, அவர்கள் விமர்சிக்கின்றனர். எங்களிடம் இருந்து பணம் பெறும்போது, அதெல்லாம் தெரியாதா.. நாங்கள் லாட்டரி வாயிலாக நேர்மையாக சம்பாதித்து தான் பணம் சேர்த்துள்ளோம். வரி கட்டிதான் எல்லாமே வந்துள்ளது அந்தத் தொகையைத்தான், தி.மு.க.,வினர் பெற்றுள்ளனர்" இவ்வாறு சார்லஸ் மார்ட்டின் கூறினார்.
பெண்களுடன் தொடர்பு
அதேபோல் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் குறித்து சில கடுமையான தனிநபர் விமர்சனங்களை வைத்தார்.. திருமணம் கடந்த உறவில் சில பெண்களுடன் இருந்துள்ளார் என்றும் நிறைய பெண்களுடன் தொடர்பு உண்டு என்றும் அவர்களுக்கு கார்களையும் பரிசளித்துள்ளார் என்றும் சார்லஸ் விமர்சித்தார். மேலும் குடும்பத்தை ஒழுங்காக நடத்த துப்பு இல்லாதவர் என்றும் கடுமையாக விமர்சித்தார். முன்னதாக லால்குடியில் பேசும் போது, என்னுடைய மச்சான் ஆதவ் அர்ஜுனா மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எங்களுடைய அம்மாவை, அவரது சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்கான சதி வேலை செய்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. அவர் தோற்கப் போகிறார். " என்று சார்லஸ் மார்ட்டின் கூறியிருந்தார்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தமிழகத்தில் புதிய FSI கொள்கை.. 15+ அடுக்குமாடி கட்டிடங்கள்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Aadhav Arjuna: "இந்தி தெரியாது போடா" துரந்தர்னு விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா தடாலடி பதில்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications