எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தவெக ஆதவ் அர்ஜுனா, 2 நாட்களில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள் என்று குட்டையை குழப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "புதுச்சேரியில் திமுக என்ன ஆளுங்கட்சியா. உங்களுக்கு அங்க எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் தானே பெரியக்கட்சி. அவர்கள் தானே முதலமைச்சர் வேட்பாளர். கடைசி வரை வேட்புமனுத்தாக்கல் கூட செய்யவில்லை. புதுச்சேரி நாராயணசாமிக்கு திமுகவும், டெல்லி லாபியும் மட்டும் தான் தெரியும். கள அரசியல் அவருக்கு தெரியாது. கண்ணை திறந்தாலும், மூடினாலும் திமுக மட்டும் தான் அவருக்கு தெரியும். (Aadhav Arjuna)

நடுத்தெருவில் காங்கிரஸ்
2 தேர்தல்களில் காங்கிரஸ் அங்கு படுதோல்வியடைய வைத்தார். 2026 தேர்தலில் நாராயணசாமிக்கு வாய்ப்பே வழங்கவில்லை. திமுக அவரை ஏமாற்றிவிட்டது. பாஜகவுடன் இணைந்து திமுக சூழ்ச்சி செய்து அங்கு காங்கிரஸை ஒழித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் சுயமாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. அவரை பாஜக தான் அனுப்பியது. அதனால் இன்றைக்கு காங்கிரஸ் நடுத்தெருவில் நிற்கிறது.
அங்கு நாராயணசாமியை போல தமிழ்நாட்டில் ப. சிதம்பரம் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஒட்டு மொத்த பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். திமுக குதிரை மீது ஏறி கொண்டு மாற்றம் வரக்கூடாது என நினைத்தோம். ராகுல் காந்தியும் விஜய் மீது தான் அன்பு வைத்துள்ளார். ஆனால் இங்குள்ள வயதானவர்கள் பெட்டி வாங்கிக் கொண்டு அடமானம் வைத்துவிட்டனர் என்று காங்கிரஸ் கட்சியினர் புலம்புகிறார்கள்.
கட்டாய கல்யாணம்
இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள். பிடிக்காத ஒரு பெண்ணை அழைத்து ரூமில் அடைத்து கட்டாய கல்யாணம் செய்தது போலத்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு திமுக மற்றும் டெல்லி இருவரையும் ஒரே நேரத்தில் எதிர்க்கின்ற தலைவர் விஜய் மட்டும் தான். இதே நிலை நீடித்தால் சிதம்பரமும் ஒழிந்து, காங்கிரஸ் கட்சியும் காணாமல் போய்விடும்.
நாங்கள் அனுபவசாலிகள், எங்களுக்கு பொருளாதாரம் தெரியும் என்று கதை கதையாகவிடுவார். ஆனால் காங்கிரஸை வளரவே விடமாட்டார். திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுடன் எப்படி டீல் முடிக்கிறார்கள். பாஜகவில் இருந்து திமுகவுக்கு வந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், 1 ராஜ்யசபா, அதுவே 8 வருடங்களாக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு 5 தொகுதிகள் தான் வழங்கியுள்ளனர்" என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications