சட்டென வந்த "ஜாக்பாட்" அறிவிப்பு.. ஆடி கிருத்திகையில் துள்ளி குதிக்கும் திருத்தணி.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகம், ஆடிகிருத்திகையை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
பணிநிமித்தம், கல்வி, உட்பட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்..
இதுபோன்ற சமயங்களில் பஸ்கள், ரயில்கள் என எல்லா இடங்களிலும் நெரிசல் காணப்படும். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது., அந்தவகையில் இப்போதும் ஆடி கிருத்திகை வருவதால், இதையும் கவனத்தில் கொண்டுள்ளது.
ஆடிகிருத்திகை: வழக்கமாக, திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மிக விமரிசையாக கொண்டாடப்படும்... இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திருத்தணி கோவிலுக்கு திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்... பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு வருடமும் திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த வருடமும், சிறப்பு பஸ்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
8ம் தேதி முதல், 10-ந் தேதி வரை காஞ்சிபுரம் மண்டலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படுகின்றன..
கூடுதல் பஸ்கள்: காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு கூடுதலாக 100 பேருந்துகளும், அரக்கோணம் - திருத்தணி 25, சென்னை - திருத்தணி 100, திருப்பதி - திருத்தணி 75 பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதைத்தவிர, சிறப்பு பயணிகள் ரெயிலும் இயக்கப்படுகிறது... அரக்கோணம்-திருத்தணி இடையே 3 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டு உள்ளது. நேற்று அதாவது, 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்படும் சிறப்பு மின்சார ரெயில் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை ரெயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.
மிகுந்த மகிழ்ச்சி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் வருகிற 10ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளும் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளது, பயணிகள் மற்றும் பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications