டெல்லி தேர்தலில் இந்தியா கூட்டணியாக போட்டியிடாமல் போனதே ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம்- CPI(M) சண்முகம்
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணமே, தமிழ்நாட்டைப் போல 'இந்தியா' கூட்டணியாக ஒருங்கிணைந்து போட்டியிடாமல் போனதுதான்; தமிழ்நாடு போல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி உருக்குப்போல வலுப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:
டெல்லி சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடாததே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. தமிழ்நாடு போல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி உருக்குப்போல வலுப்பட வேண்டும்.
மதவெறி அபாயத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அதுதான் வழி. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெற மார்க்சிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். திமுகவின் வாக்குகளை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக, பாஜக கட்சிகளின் வாக்குகள் கணிசமாக நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளது. பேச்சு, உடல் மொழி போன்ற சீமானின் நடவடிக்கைகளால் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு பெரிய அளவில் சரிந்துள்ளது.
2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக ஓய்வூதியம் குறித்து குழு அமைத்து 9 மாதம் அவகாசம் அளித்திருப்பதை ஏற்க முடியாது. குழு போட வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம்.
வேங்கை வயலைப் பொறுத்தவரை சிபிசிஐடி போலீசாரின் குற்றப் பத்திரிகையை நாங்கள் ஏற்கவில்லை. பிரச்சனையை முடிக்க வேண்டும் என்பதற்காக யூகத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே, அதை மற்றொரு விசாரணை அமைப்புக்கு விடுவதில் என்ன தவறு இருக்கிறது?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், கீழே சுப்பிரமணியர் கோவில் இருக்கிறது, மேலே சிக்கந்தர் தர்கா இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்துக்களும் தர்காவுக்குச் சென்று பலி கொடுத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள். மத நல்லிணக்கத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் மூலம் கலவரத்தைத் தூண்டிவிட இந்து அமைப்பினர் மேற்கொண்ட முயற்சி 144 தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications