ஆருத்ரா கோல்டு மோசடி... நடிகர் ரூசோவிடம் ஆர்.கே. சுரேஷ் வாங்கிய ரூ.15 கோடி.. வெளியான வில்லத்தனம்
சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

விசாரணையில், அந்த நிறுவனம் ஒரு லட்சத்து 9,255 பேரிடம், மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்றுமோசடி செய்தது தெரியவந்தது. இந்தவழக்கு தொடர்பாக இதுவரை11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ராஜசேகர், உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால், ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ. 6.35 கோடி ரொக்கம், ரூ. 1.13 கோடி மதிப்புள்ள நகைகள், 22 கார்கள், 103 அசையா சொத்துகள், ரூ. 96 கோடி வங்கி பணம் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுக்கு தப்பி ஒடிய ராஜசேகர், அவரது மனைவி உஷா இருவரையும் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய நாராயணி, தீபக் கோவிந்த பிரசாத், ரூமேஸ்குமார் ஆகிய மூவருக்கும் லுக் அவுட் சர்குலர் அளித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவலை பெற்றது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் நடிகர் ஆர். கே. சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
இந்நிலையில் ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமாகியுள்ளது. ஆர்.கே.சுரேஷ் கடந்த 5 மாதங்களாகவே தலைமறைவாக இருக்கிறார். இதனிடையே 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவெடுத்துள்ள நிலையில், 500 முகவர்கள் மூலம் ரூபாய் 800 கோடி வசூலித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மோசடி வழக்கில் 40 பேர் குற்றவாளிகளாக சேர்த்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிஜாவு நிதி மோசடி வழக்கிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் ஆசியம்மாள் ஐஜி கூறியுள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications