ஆருத்ரா மோசடி: போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்த ஆர்.கே.சுரேஷ்! கிடைத்த புதிய தகவல்கள்!
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் இன்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராகவுள்ள நடிகர் ஆர்.கே. சுரேஷ் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கி கைதான நடிகரும் தயாரிப்பாளருமான ரூசோ என்பவர் நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடி மூலம் ரூ 15 கோடி பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதையடுத்துதான் போலீஸார் ஆர்.கே. சுரேஷையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆர் .கே. சுரேஷ் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி அவர் நேற்று முன் தினம் துபாயிலிருந்து சென்னை வந்தார்.
அவர் வந்ததும் அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸை வைத்து விசாரித்தனர். அப்போது தான் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் அவர் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன்பு நேற்று ஆஜரானார்.
மொட்டை அடித்துக் கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் வந்திருந்தார். இந்த நிலையில் அவரிடம் நேற்று நீண்ட நேரம் விசாரணை நடந்தது. அப்போது அவர் போலீஸாரிடம் கூறிய தகவல்கள் குறித்து வெளியாகியுள்ளது. ஆர் கே சுரேஷிடம் ஏன் இத்தனை நாள் தலைமறைவாக இருந்தீர்கள் என அதிகாரி கேட்டாராம்.
அதற்கு ஆர் கே சுரேஷ் கூறியிருந்ததாவது: நான் தலைமறைவாக இல்லை. என் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நான் துபாயில் இருந்தேன். தயாரிப்பாளர் ரூசோவிடம் ஒயிட் ரோஸ் என்ற படத்திற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றேன். அதை வங்கிக் கணக்கு மூலமாகவும் ரொக்கமாகவும் பெற்றுள்ளேன்.
ரூசோவிடம் வாங்கிய பணத்தை படத்திற்காகவும் சொந்த செலவிற்காகவும் பயன்படுத்தினேன் என தெரிவித்திருந்தார். ஆர்.கே. சுரேஷிடம் நடத்தும் விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரூசோவுடனான பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை இன்று கொண்டு வருமாறு சுரேஷுக்கு போலீஸார் உத்தரவிட்டனர்.
ஆருத்ரா வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஆர்.கே. சுரேஷ் சந்தித்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications