ஆருத்ரா நிதி நிறுவன மோசடி.. 2 மாதமாக ஆர்.கே.சுரேஷின் செல்போன் சுவிட்ச் ஆப்!.. எங்கே இருக்கிறார்?
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் எந்த நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறித்து விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆருத்ரா நிதி நிறுவனம் கிளைகளை கொண்டது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. இந்த நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரப்படுத்தியது.
இந்த விளம்பரத்தை பார்த்த பலர் இந்த நிறுவனத்தில் தங்களால் இயன்ற பணத்தை முதலீடு செய்தனர். இதன் மூலம் ரூ 2,438 கோடி பணம் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வசூலித்த பணம்
இந்த நிலையில் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் திருப்பித் தராமல் இழுத்தடித்ததாக புகார் எழுந்தது. பலர் ஆருத்ரா நிதி நிறுவன கட்டடங்களுக்கு சென்று போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தாமாக முன் வந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீது ஆருத்ரா பெயரில் இயங்கி வந்த 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தது.

8 பேர் கைது
இந்த வழக்கு விசாரணையில் 8 பேர் கைது செய்யப்பட்டது. அண்மையில் பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளரான ஹரீஷ் கைது செய்யப்பட்டார். அத்துடன் நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான மாலதியும் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பலர் தொடர்ந்து கைதாகி வந்தனர். இந்த நிலையில் இதுவரை 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ்கர்
இதில் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் ஆகியோரும் அடங்குவர். மேலும் ஐயப்பன், நடிகர் ரூசோ, ராஜசேகர் ஆகியோரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் பகுதியில் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்தவர் ரூசோ. ரூசோ ஐஏஎஸ் பயிற்சி அகாதெமியையும் நடத்தி வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கியதும் ரூ 10 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்டியதும் தெரியவந்தது. இவர் ஆர்.கே.சுரேஷ் இயக்கும் படத்தை தயாரித்து அந்த படத்தில் போலீஸ் எஸ்பி வேடத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் அந்த படம் முடிவடையவில்லை.

மோசடி பணம்
ரூசோ விசாரணையில் மத்திய அரசில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க ஆர்.கே.சுரேஷ் தன்னிடம் இருந்து 12 கோடி ரூபாய் வாங்கியதாக ரூசோ வாக்குமூலம் அளித்துள்ளாராம். இது குறித்து விசாரணை நடத்த ஆர்.கே.சுரேஷை காவல் துறையினரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளதாம். இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்.கே.சுரேஷ் துபாய் தப்பிச் சென்றதாகவும் கடந்த இரு மாதங்களாக அவர் இந்தியாவில் இல்லை என்றும் தெரிகிறது. விசாரணைக்கு ஆர்.கே.சுரேஷ் ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு உள்படுத்த போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications