ரிப்போர்ட் இருக்கு வேணுமா? காதால் கூட கேட்க முடியவில்லை.. கொதிக்கும் அன்னபூரணி.. என்ன சொன்னார்?
சென்னை: அன்னபூரணி குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தனது இரண்டாவது கணவர் அரசுவின் மரணம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதிபராசக்தி அம்மா அவதாரம் என்ற பெயரில் அன்னபூரணி என்ற பெண் செங்கல்பட்டில் அருள்வாக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில் ஜனவரி 1ம் தேதி நடக்க இருந்த அன்னபூரணியின் அவதார அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
இவரின் அருள்வாக்கு வீடியோக்கள் இணையத்தில் பரவி சர்ச்சையானது. பல்வேறு இந்து அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவரின் இரண்டாவது கணவர் அரசு மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பேட்டி
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனமான பிஹைண்ட் வுட்ஸ் நிறுவனத்திற்கு அன்னபூரணி அளித்த சிறப்பு பேட்டியில், என்னுடைய கணவர் அரசு மர்மமான முறையில் மரணம் அடையவில்லை. அவரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த ரிப்போர்ட்டை கொடுக்க கூட தயார்.

கணவர் மரணம்
என்னை பற்றி தவறாக பேசுவதை நிறுத்துங்கள். அவருக்காக வைக்கப்பட்ட சிலை இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் இடத்தை விற்பனை செய்ய முடியவில்லை. சிலை இருப்பதால் அதை பலர் வாங்கவில்லை.

அன்னபூரணி
இதனால் அங்கு இருக்கும் சிலையை அகற்றும்படி நான்தான் கோரிக்கை விடுத்தேன். சிலையை எடுத்துவிடலாம் என்று நான் கூறிய பின்புதான் சிலை அகற்றப்பட்டது. இதை பற்றி தவறான செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இப்போது அந்த சிலை அகற்றப்பட்டு நிலத்தை விற்பனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

அன்னபூரணி அரசு சிலை
இது தொடர்பாக காதில் கேட்க முடியாத வதந்திகள் பரவி வருகின்றன. நானும் அரசும் நெருக்கமாக வாழ்ந்தோம். அவர் இப்போது என்னுடன் ஒளியாக இணைந்துவிட்டார். என்னுடைய பொண்ணுக்கு கூட நான் தனிப்பட்ட பர்சனல் டைம் தர முடியவில்லை.
Recommended Video

ஆன்மீகம்
என்னுடைய பயிற்சிக்கு வருபவர்களுக்குதான் நான் நேரம் ஒதுக்கி தருகிறேன். தனிப்பட்ட பர்சனல் விஷயங்களை செய்ய முடிவதே இல்லை. எனக்கு சுயநலமே இல்லை. நான் ஆன்மீக பணியில் இருக்கிறேன்., என்று அன்னபூரணி கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications