"உஷார் ஆகிட்டாங்க.. வண்டியை திருப்பு" போனை சுவிட்ச் ஆப் செய்த அவதாரம் அன்னபூரணி.. தலைமறைவா?
சென்னை: இணையத்தில் வைரலாகி வரும், தன்னை அவதாரம் என்று அழைத்துக்கொள்ளும் அன்னபூரணி தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Recommended Video
அன்னபூரணி அம்மா அருள்வாக்கு வழங்க போவதாக சமூக வலைத்தளங்களில் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது. ஆதிபராசக்தி அவதாரமாக உருவெடுத்துவிட்டார். அவர் மக்களுக்கு அருள் வழங்க போகிறார். ஜனவரி 1ம் தேதி எல்லோரும் செங்கல்பட்டிற்கு வந்துவிடுங்கள் என இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த போஸ்டர்தான் இணையம் முழுக்க தற்போது நடக்கும் சர்ச்சைகளுக்கும், மீம் திருவிழாவிற்கும் காரணம்.

யார் இவர்?
தன்னை தானே ஆதிபராசக்தியின் அவதாரம் என்று அன்னபூரணி அறிவித்துள்ளார். இவரின் பக்தர்கள் எல்லாம் இவரை அம்மா.. அம்மா என்று வாய் நிறைய அழைக்கிறார்கள். நேரடியாக இவரை சந்திக்க செங்கல்பட்டு நேரு நகரில் இருக்கும் வாசுகி மஹாலுக்கு வரும் மக்களுக்கு இவர் அருளாசி வழங்கி வருகிறாராம். இந்த நிலையில்தான் வரும் ஜனவரி 1ம் தேதி தான் அவதார அருள் அளிக்க போவதாக போஸ்டரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவதாரம்
பல நூறு பக்தர்களுக்கு வரிசையாக இவர் ஆசிர்வாதம் வழங்கும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இப்படி பல வீடியோக்கள் வெளியான நிலையில் இணையத்தில் இவர் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தார். அதே சமயம் தமிழ்நாடு அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள், இந்து மத ஆதரவாளர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோரிக்கை
இந்து மதத்தை இவர்கள்தான் மோசமாக சித்தரிக்கிறார்கள். இதுபோன்ற போலி சாமியார்களை தொடக்கத்திலேயே நிறுத்த வேண்டும். இவர்கள் வளர்வதால்தான் இந்து மதத்தை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையத்தில் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். அன்னபூரணி அம்மாவின் வீடியோக்களை பகிர்ந்து கடும் விமர்சனங்களை இவர்கள் வைத்து வந்தனர்.

தடை
இந்த நிலையில்தான் அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 1ம் தேதி செங்கல்பட்டில் உள்ள அதே வாசுகி மஹால் மண்டபத்தில் நடைபெற இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்காது.

விசாரணை
இது தொடர்பாக அன்னபூரணி தரப்பில் விசாரிக்க போன் செய்தால் அவர் மற்றும் அவரின் நிர்வாகிகள் போன் அனைத்தும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் தரப்பில் விசாரித்ததில், அவரை தேடி வருகிறோம். விரைவில் அவரிடம் விசாரணை நடத்துவோம். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications