ஆவின் நெய், வெண்ணெய் அதிரடி விலை உயர்வு.. ஒரு கிலே நெய் ரூ.700 ஆக விற்பனை.. மக்கள் அதிர்ச்சி
சென்னை: ஆவின் நெய் ஒரு கிலோ 70 ரூபாய் அதிகரித்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் ஆவின் நெய் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நெய் மட்டுமல்லாது ஆவின் வெண்ணெயும் விலை உயர்ந்துள்ளது.
ஆவின் பால் விலையை தொடர்ந்து, நெய் விலையும் உயர்வு. ஒரு லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்ந்துள்ளது

ஆவின் நெய் 200 மி.லி ரூ.130ல் இருந்து 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக, ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் சமையல் வெண்ணெய் ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.265 ரூபாயில் இருந்து 280ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால், வெண்ணெய், நெய் என அடுத்தடுத்த விலை உயர்வு நுகர்வோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்களில் இனிப்புகள், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் நெய், வெண்ணெய்க்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் உண்டு. தனியார் நெய், வெண்ணெயை விட சுவை கூடுதலாகவும் விலை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் இந்த நிலையில் ஆவின் வெண்ணெய், நெய் அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டு வருவது சாமானிய மக்களிடைய அதிருப்தியை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications