தமிழகத்தில் ஆவின் நெய், வெண்ணைக்கு கடும் தட்டுப்பாடு.. எப்போது சரியாகும்.. அதிகாரி தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பாலகங்களில் ஆவின் நெய், வெண்ணை போன்ற பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய் , பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்களில் இனிப்புகள், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சில நாட்களாக ஆவின் நெய் வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.அதாவது 200 மற்றும் 500 கிராம் நெய் பாட்டில்கள் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஆவின் பாலக உரிமையாளர்கள் ஆவின் நிர்வாகத்தின் பால் கொள்முதல் தற்போது குறைந்துள்ளது. அதனால் பாலில் இருந்து செய்யப்படும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் வருவதில்லை என்று கூறுகின்றனர். ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடுமையாக குறைந்து போனதன் காரணமாக வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதனால் நெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
வெண்ணெய், நெய் தட்டுப்பாடு குறித்து ஆவின் நிர்வாக அதிகாரியிடம் கேட்ட போது, தற்போது பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் மக்களுக்கு வழக்கம் போல ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என கூறினார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications