இப்போ தும்முனா தான் சரியா இருக்கும்! சத்தமில்லாமல் உயர்ந்த ஆவின் ஐஸ்கிரீம் விலை! சொல்லவே இல்லையே?!
சென்னை: தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் பால் பொருட்கள் தயாரிப்போடு ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆவினில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றின் விலை திடீரென உயர்த்தப்பட்டிருப்பதாகவும், ஒன்றாம் தேதி முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசு பால்வளத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகம் முழுவதும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இதற்காக பல தொழிற்சாலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் எனவும் இது அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான லிட்டர் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏராளமான தனியார் பால் நிறுவனங்கள் பெருகி விட்டாலும், தற்போது கூட சென்னை போன்ற நகர் பகுதிகளில் ஆவின் பால் இல்லையென்றால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் இன்னல்களை சந்திக்க நேரிடும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆவின் பால். உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் ஆவின் நிலையங்களில் பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகியவை ஆவின் நிறுவனம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஆரஞ்சு, நீலம், பச்சை, பழுப்பு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் ஆவின் நெய், பன்னீர், வெண்ணெய், இனிப்பு வகைகள் என பால் பொருட்களும் ஆவின் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சுகாதாரமான முறையில் குறைந்த விலையில் ஆவின் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாகவும் முகவர்கள் மூலமாகவும் ஐஸ்கிரீம் பால் உள்ளிட்டவை ஆவின் பாலகங்களிலும் தனியார் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஆவின் ஐஸ்கிரீமின் விலை திடீரென உயர்த்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் மூன்று ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விலை உயர்வு இருக்கும் நிலையில் கடந்த ஒன்றாம் தேதியே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், 25மிலி மினி குல்பி 12.00 ரூபாயில் இருந்து 15.00 ரூபாயாகவும், 50மிலி வெண்ணிலா, மேங்கோ, ஸ்டாபெர்ரி வகைகள் 10.00 ரூபாயில் இருந்து 15.00 ரூபாயாகவும், சாக்லேட், பிஸ்தா வகைகள் 12.00 ரூபாயில் இருந்து 18.00 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.
500 மிலி லவ்லி லிட்சி, ஸ்டாபெர்ரி, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் வகைகள் 125.00 ரூபாயில் இருந்து 200.00 ரூபாயாகவும், ப்ளாக் கரண்ட் ப்ளாஸ்ட் 135.00 ரூபாயில் இருந்து 200.00 ரூபாயாகவும், சாக்லேட் மேனியா, ஸ்டாபெர்ரி 145.00 ரூபாயில் இருந்து 200.00 ரூபாயாகவும், பிஸ்தா பேஷன் 170.00 ரூபாயில் இருந்து 240.00 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், 500 மிலி வெண்ணிலா 75.00 ரூபாயில் இருந்து 120.00 ரூபாயாகவும், மேங்கோ, ஸ்டாபெர்ரி 95.00 ரூபாயில் இருந்து 140.00 ரூபாயாகவும், சாக்லேட், பிஸ்தா, பாதாம், பட்டர் ஸ்காட்ச் 95.00 ரூபாயில் இருந்து 140.00 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.
1000 மிலி வெண்ணிலா, மேங்கோ, பட்டர் ஸ்காட்ச் 150.00 ரூபாயில் இருந்து 220.00 ரூபாயாகவும், சாக்லேட் 170.00 ரூபாயில் இருந்து 250.00 ரூபாயாகவும், பிஸ்தா 175.00 ரூபாயில் இருந்து 250.00 ரூபாயாகவும், பாதாம், பட்டர் ஸ்காட்ச் 180.00 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பயன்படும் வகையிலான 4500மிலி Bulk ஐஸ்கிரீம் வகைகள் 80.00 ரூபாய் முதல் 100.00 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை விலை உயர்வு 01.10.2024 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications