செம.. உலக நாடுகளில் உலா வரப்போகும் ஆவின் பால்.. பால்வளத்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஆவின் பால் ஏற்றுமதி தற்போது சிங்கப்பூர், மலேசிய ,துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

அமைச்சர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சியில் முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணி நடைபெற்றது .மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். பின்னர் பூந்தமல்லி பேருந்து நிலையம், கழிவறை, உரக்கிடங்கு போன்றவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.

ஆவின் பால் ஏற்றுமதி
பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தை விரைவில் தூய்மை மாவட்டமாக மாற்றுவோம். பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 1000 கோடி மதிப்பில் ஒருகிணைந்த பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது.

ஐரோப்பிய நாடுகளுக்கு விரைவில் ஏற்றுமதி
தற்போது ஆவின் பால் உற்பத்தி பொருட்களை சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மேலும் தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன் படி ஆவின் பாலில் உற்பத்தி செய்யக்கூடிய 152 பொருட்கள் விரைவில் தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன/

டெல்டா பிளஸ் அச்சம் வேண்டாம்
ஆவடியில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாடு அரசு இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications