ஆவினே இப்படி செய்தால் எப்படி.. ஏற்கனவே கரண்ட் பில் ஷாக்.. ஜி.கே. வாசன் ஆதங்கம்.. முக்கிய வேண்டுகோள்
ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வை நீக்க வேண்டும் என்று வாசன் கோரியுள்ளார்
சென்னை: ஆவின் பொருட்களின் விலை உயர்வை, தமாகா தலைவர் ஜிகே வாசன் கண்டித்துள்ளார்.. உடனடியாக விலைஉயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கான விலையை உயர்தியது.. எனினும் தற்போது, மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்சி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தி உள்ள நிலையில் ஆவினும் உயர்த்திவிட்டது.. நெய்யின் விலை ரூ.5 ல் இருந்து ரூ .45 வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது..

வாய்ப்பில்லை
சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. அரிசிக்கும் ஜிஎஸ்டி விதித்ததையடுத்து, பால் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டது அதிருப்தியை கிளப்பியது.. அப்போது, ஆவின் பொருள்களின் விலையும் உயருமா என்று பால் வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. விலை உயர்த்தும் வாய்ப்பில்லை என்று அமைச்சரும் கூறியிருந்த நிலையில், ஆவின் பொருள்களின் விலை உயர்வு என்ற அறிவிப்பு வெளியாகியது.

லஸ்ஸி விலை
ஆவின் தன்னுடைய உபபொருட்களின் விலைகளை உயர்த்தி அறிவித்திருந்த நிலையில், இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.. தயிர் அரை லிட்டர் ரூ.30-லிருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிர், ரூ.10-லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பிரீமியம் தயிர் ரூ.100 லிருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புரோபயாடிக் லஸ்ஸி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி மோர் ரூ.10லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஆவின் பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசன் அறிக்கை
இந்நிலையில், தமாகா தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் ஆவின் நிறுவனம் , நெய் , தயிர் மற்றும் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கு விலையேற்றம் செய்தது. ஆனால் குறுகிய காலத்திற்குள் மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது ஏழை , எளிய மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது . ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் தயிர் மற்றும் நெய்யின் விலை ரூ.5 ல் இருந்து ரூ.45 வரை உயர்த்தியுள்ளது மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

சுமைகள்
பொருளாதார ரீதியில் இவ்வேளையில் தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்தியும் ஏழை மக்கள் மீது விலையேற்றியும், மென்மேலும் சுமையை ஏற்றுகிறது . சிரமப்படும் அரசு நிறுவனமான ஆவினே விலையேற்றும் செய்யும் பொழுது தனியார் நிறுவனங்களும், அவர்களது பொருட்களுக்கு பொருட்களுக்கு மேலும் விலையேற்றம் செய்ய மிகுந்த வாய்ப்புள்ளது. எனவே ஏழை, எளிய மக்களின் நலன் கருதி ஆவின் நிறுவனம் அறிவித்த விலையேற்றத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று வாசன் குறிப்பிட்டுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications