இது நல்ல ஐடியாவாக இருக்கே! கூட்டுறவுத்துறை வட்டியில்லா வாரக்கடன் தரணும்! சட்டசபையில் புதிய கோரிக்கை!
சென்னை: கூட்டுறவுத்துறை சார்பில் வட்டியில்லா வாரக்கடன் வழங்க வேண்டும் என சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கேள்வி நேரத்தின் போது பேசிய மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடை நடத்துபவர்களின் நிலை குறித்து சில விவரங்களை எடுத்துரைத்தார்.

கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கடனாக பெற்று வியாபாரம் செய்யும் இந்த சிறு வியாபாரிகள், தங்களுக்கு கிடைக்கும் லாபம் முழுவதையும் கந்துவட்டிகாரர்களுக்கு கொடுத்து விடுவதாக பரிதாபம் தெரிவித்தார்.
தமிழக அரசை பொறுத்தவரை பல விவகாரங்களில் நாட்டிற்கே முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் நிலையில், வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் கடனுதவி அளிப்பதிலும் மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன் அடிப்படையில் சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள், என சிறிய அளவில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு கூட்டுறவ்வுத்துறை சார்பில் வட்டியில்லா வாரக்கடன் வழங்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தார்.
வட்டியில்லா வாரக்கடன் திட்டத்தின் மூலம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கடன் வழங்கினால் சிறு வியாபாரிகளும் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யலாம் என எடுத்துக் கூறினார்.

அப்துக் சமது எம்.எல்.ஏ.வின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், வட்டியில்லா வாரக்கடன் தருவது பற்றி கூட்டுறவுத்துறை சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் ஏனெனில் பொதுமக்களின், விவசாயிகளின் வைப்புத் தொகையை வைத்தும் அதற்கு வட்டி கொடுக்க வேண்டிய நிலையிலும் தான் கூட்டுறவுத்துறை வங்கிகள் இயங்கி வருவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினிடத்தில் இந்தக் கோரிக்கையை வைத்து அவர் உத்தரவிட்டார் என்றால், அதற்கேற்ப அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications