சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்.மாணிக்கவேலுக்கு பதிலாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்- வீடியோ

    சென்னை: சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஏடிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி, அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கரூரில் காகித நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும், அபய் குமார் சிங், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

    Abhay Kumar Singh is now Additional director general of police idol wing

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 28 ஆண்டுகளில் சுமார் 300 சிலைகளை மட்டும் தான் கண்டுபிடித்தனர். ஆனால் சிலை தடுப்பு பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் பதவியேற்ற பிறகு சுமார் 1,146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

    இருப்பினும், பொன்.மாணிக்கவேல் தனது உயர் அதிகாரிகளை மதிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம் சாட்டியது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்தநிலையில் பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அவர் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக இருந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் ஓய்வுபெறும்போது புதிதாக ஒரு அதிகாரியை நியமனம் செய்திருப்பதன் மூலம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு வழங்கும் தனது முடிவில் தமிழக அரசு பின்வாங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Tamilnadu government appointed Abhay Kumar Singh as Additional director general of police idol wing CID.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X