அபிநந்தனை மீட்கும் நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டார் மோடி.. பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை: இந்திய பைலட் அபிநந்தனை பிரதமர் நரேந்திர மோடி பத்திரமாக மீட்டெடுப்பார் என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தால், இந்திய போர் விமான பைலட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவமோ, கைதானவர் பெயர் அபிநந்தன் என கூறியுள்ளது.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்வீட்டரில் கூறியுள்ளதாவது: இந்திய விமானப்படை வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபினந்தன் வர்த்தமான் கைது செய்யப்பட்டு பாக் வசம் இருப்பதாக செய்தி ஊகங்களில் வந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, வெளிவுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில், ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) February 27, 2019


Click it and Unblock the Notifications
