சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 ஆண்டுகளுக்கு பிறகு.. தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்.. ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியே மலரும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஏபிபி- சிவோட்டர் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்கு பின்னர் நடந்த முதல் சட்டசபைத் தேர்தல் இதுவாகும். எனவே எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ABP-CVoter Exit poll 2021: DMK will form government in Tamilnadu

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 234 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வரும் மே 2 ஆம் தேதி வெளியாகிறது.

அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை ஒரு அணியாகவும் அமமுக, தேமுதிக இன்னொரு அணியாகவும் போட்டியிட்டன.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன. சீமானின் நாம் தமிழர் மட்டும் தனித்தே போட்டியிட்டது.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஏபிபி- சிவோட்டர் வெளியிட்டுள்ளது.

இதில் திமுக கூட்டணி கட்சிகள் 166 இடங்களிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் 64 இடங்களிலும் அமமுக- 1 ஒரு இடத்திலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது.

English summary
ABP-CVoter Exit poll 2021: DMK and its ally will win in Tamilnadu Assembly election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X