பெண் வீட்டு முன்பு சிறுநீர் கழித்த சுப்பையா, அரசு மருத்துவர் பணியிலிருந்து சஸ்பெண்ட்! ஏன் தெரியுமா?
சென்னை: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் முன்னாள் தேசியத் தலைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவருமான டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சுப்பையா குடியிருக்கும் குடியிருப்பில் 62 வயது பெண்மணியுடன் தகராறு செய்தார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புகார். இந்த பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் சுப்பையா வண்டியை நிறுத்த அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பெண், வாடகையை தர வேண்டும் என்று கூறினார். இதில்தான் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சிறுநீர் கழிக்கும் காட்சிகள்
இந்த மோதலின் உச்சமாகத்தான் அனைவரையும் அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. பெண்மணியின் வீட்டின் முன்பாக சுப்பையா குப்பைகளைக் கொட்டுவதுடன் அவரது வீட்டு கதவு முன்பாக நின்று சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகின. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவர் சுப்பையாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

புகார் வாபஸ்
ஆனால் இந்த காட்சிகளை சுப்பையா நிராகரித்திருந்தர். இது தொடர்பாக சென்னை ஆதம்பாக்கத்தில் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் டாக்டர் சுப்பையா தரப்பில் அழுத்தம் தரப்பட்டதால் இப்புகார் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எய்ம்ஸ் உறுப்பினர்
மேலும் சுப்பையா மீது அரசு துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடயே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக மருத்துவர் சுப்பையா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிப்பதா? எனவும் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பணியிடை நீக்கம்
இந்நிலையில் மருத்துவர் சுப்பையா, அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறியதாகவும் துறை ரீதியான விசாரணை நடைபெறுவதாலும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவ கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது. துறை ரீதியான விசாரணை தொடரும் வரை சுப்பையாவின் பணிநீக்கம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டை ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட்டு தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அதில் கைது செய்யப்பட்டவர்களை சிறைக்கு சென்று சுப்பையா சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறையை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications