இனி குளுகுளுன்னு பயணிக்கலாம்.. ஏசி மின்சார ரயில்.. புத்தாண்டில் வருது குட் நியூஸ்.. எல்லாம் ரெடி
சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில்கள், சென்னை - செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் - ஆவடி, அரக்கோணம், கும்ம்டிப்பூண்டி ஆகிய ரூட்களில் இயக்கப்பட உள்ளதாக சென்னை பிராந்திய மேலாளர் (டிஆர்எம்) தெரிவித்துளளார்.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை சிட்டிக்குள் பல்வேறு காரணங்களுக்கு வந்து செல்கிறார்கள். இவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான்.

ஏசி மின்சார ரயில்: சென்னையில் ஆவடி- சென்ட்ரல், கடற்கரை - வேளச்சேரி, கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில்தான் அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிண்டி, மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும்.
சில நிமிடங்கள் ரயில்கள் தாமதம் ஆனால் கூட ரயில் நிலையத்தில் எதோ திருவிழா கூட்டம் போல எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டம் அலைமோதும். அந்த அளவுக்கு சென்னை சிட்டிக்குள் மிக முக்கிய ரூட்டாக இது உள்ளது. புறநகர் ரயில்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் ஏதிர்பார்ப்பு: குறிப்பாக புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. புறநகர் மின்சார ரயில்களில் அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் ஏசி வசதி கொண்ட ரயில்கள் இயக்கினால் எந்த களைப்பும் இல்லாமல், எளிதாக பயணிக்க முடியும் என்பதும், பயணிகள் ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
எப்போது சேவை தொடங்கும்?: ஏசி கோச்கள் கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்றது. இதற்கான பணி முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஜனவரி முதல் மின்சார ஏசி ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில்கள், சென்னை - செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் - ஆவடி, அரக்கோணம், கும்ம்டிப்பூண்டி ஆகிய ரூட்களில் இயக்கப்பட உள்ளதாக சென்னை பிராந்திய மேலாளர் (டிஆர்.எம்) தெரிவித்துளளார்.
கட்டணம் எவ்வளவு?: வேளச்சேரி - கடற்கரை ரூட்டில் மட்டும் ஏசி ரயில்கள் இயக்கப்படாது எனவும், ஏனெனில் இந்த வழித்தடத்தில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கும் வசதி இருப்பதாகவும் கூறினார். இந்த ரயில்களில் கட்டணம் என்று பார்த்தால், 10 கி.மீ வரை ரூ.29 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஏசி புறநகர் ரயிலில் 11-15 கி.மீ தொலைவுக்கு ரூ.37 கட்டணமாகவும், 16-25 கி.மீ தொலைவுக்கு ரூ.65 கட்டணமாக நிர்ணயிக்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications