சென்னையில் இனி ஜில் பயணம்! அடுத்த வாரம் முதல் ஏசி மின்சார ரயில்.. உத்தேச கால அட்டவணை வெளியானது
சென்னை: சென்னையில் ஏசி மின்சா ரயில் சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பயணிகள் குளுகுளுவென பயணிக்கும் வகையில் தயாராகியுள்ள ஏசி மின்சார ரயில் சேவையினை தமிழகம் வரும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு சரியான நேரத்தில் பயணிகள் செல்ல வேண்டும் என்றால் நடுத்தர மக்கள் அதிகம் சார்ந்து இருப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான்.

ஏசி மின்சார ரயில் சேவை
புறநகர் மின்சார ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டாலும் சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்கள்தான் மிக முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த ரூட்டில் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். தற்போது சாதாரண ரயில்களே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏசி வசதி கொண்ட ரயிலும் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலம் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் தான் பயணிகள் கோரிக்கையை ஏற்று சென்னையில் ஏசி மின்சார ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இந்த மின்சார ரயில்களுக்கான பெட்டி தயாரிப்பு சென்னை ஐசிஎப்பில் நடைபெற்றது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது ஒரு மின்சார ரயில் தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. இந்த ரயில், கடந்த பிப்ரவரி மாதமே ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ஏப்ரல் - மே மாதத்தில் இந்த ரயில் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது பயணிகள் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக விரைவில் ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் 6 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். அப்போது ஏசி மின்சார ரயில் சேவையை துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தற்போது 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. மின்சார ரயில் புறப்படும் நேரம், எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பதற்கான அனுமதி பெறுவதற்கு, சென்னை கோட்டம் சார்பில் தெற்கு ரெயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உத்தேச கால அட்டவணை
தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்ததும் இந்த அட்டவணை இறுதி செய்யப்படும். இந்த ரயிலுக்கான குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.30 நிர்ணயிக்கபட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த மின்சார ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகியிருப்பது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஏசி மின்சார ரயிலின் உத்தேச கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதாவது சென்னை கோட்டம் சார்பில் தெற்கு ரயில்வேயிடம் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உள்ள கால அட்டவணை மற்றும் நிறுத்தங்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் விவரம் வருமாறு:-
செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை
* சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரத்திற்கு காலை 7.48 மணிக்கு வரும். செங்கல்பட்டுக்கு காலை 8.35 மணிக்கு வந்து சேரும்.
* மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 9.38 மணிக்கு தாம்பரம் வரும். கடற்கரைக்கு காலை 10 மணிக்கு வந்து சேரும்.
* கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மாலை 4.20 மணிக்கு சென்று அடையும். பின்னர் செங்கல்பட்டிற்கு மாலை 5.25 மணிக்கு சென்றடையும்.
* மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையதிற்கு மாலை 6.23 மணிக்கு வரும். கடற்கரைக்கு இரவு 7.15 மணிக்கு வந்து சேரும்.
* இரவு 7.35 மணிக்கு கடற்கரையில் இருந்து கிளம்பும் ஏசி ரயில் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரத்திற்கு இரவு 8.30 மணிக்கு சென்று சேரும்.
* பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரைக்கு காலை 6.45 மணிக்கு சென்றடையும்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications