ஜெ. தீபா கைக்கு வந்தது வேதா இல்லம் சாவி.. "அத்தை ஆத்மா சாந்தியடையும்.." நெகிழ்ச்சி
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவி உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெ.தீபாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என ஜெ. தீபா கூறியுள்ளார்.
Recommended Video
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு ரூ.67.90 கோடி ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என வாதங்களை தீபாவும், தீபக்கும் முன்வைத்தனர். மிகவும் பரபரப்பாக எதிர்நோக்கப்பட்ட இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வேதா இல்லத்தை அரசுடமையாக்க நிலம் கையகப்படுத்திய அறிவிப்பு, அரசாணை ரத்து செய்யப்படுகிறது எனவும், உத்தரவு நகல் கிடைத்த 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சாவியை ஒப்படைக்க தீபா மனு
இந்த தீர்ப்புக்கு தனது மகிழ்ச்சியை அளித்திருப்பதாக தீபா தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் 3 வாரத்திற்குள் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் ஆகியோர் மனு அளித்தனர். மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தீபா, தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார்.

வேதா இ
இந்த நிலையில் வேதா இல்லத்தின் சாவியை பெறுவதற்காக இன்று தீபா, தீபக் இருவரும் இன்று சென்னை மாவட்ட அலுவலகத்துக்கு வந்தனர். இதனையடுத்து வேதா இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி இருவரிடம் வழங்கினார். நீதிமன்ற உத்தரவின்படி வீட்டுச்சாவியை கேட்டு தீபா, தீபக் இருவரும் மனு செய்து நிலையில், இதுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று போயஸ் இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் விஜயராணி கூறியுள்ளார்.

ஜெயலலிதா ஆத்மா சாந்தியடையும் - தீபா
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது அத்தையான தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ,ஜெயலலிதா அவர்கள் வசித்த போயஸ் தோட்டத்திலுள்ள வேதா இல்ல சாவி தனது அண்ணன் மற்றும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் எனவும் ஜெ.தீபா கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications