Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.. ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கேம்.. 8ஆம் தேதி ரிசல்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியா கூட்டணிக்கும் - பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இடையில் நடக்கும் முதல் தேர்தல் இது.

உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, ஜார்கண்டின் டும்ரி, தன்பூர் திரிபுராவில் உள்ள போக்ஸாநகர் மற்றும் உத்தரகாண்டின் பாகேஷ்வரிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.

Acid test for India alliance: By-elections in 7 assembly constituencies in 6 states today

மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவில் புதுப்பள்ளிவிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவில் புதுப்பள்ளியில் கட்சிகள் தனி தனியாக போட்டியிட்டன. இங்கே இந்திய கூட்டணி ஒன்றாக களமிறங்காமல் ஒரு சில கட்சிகள் மட்டும் தனி தனியாக இறங்கின. காலை முதலே வாக்குச்சாவடி மையங்களில் வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்தனர்.

வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெறுகிறது. 6 மாநிலங்களில் நடக்க உள்ள இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் பற்றி பார்க்கலாம்.

கோசி இடைத்தேர்தல், உத்தரப் பிரதேசம்: பாஜகவில் இணைந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ தாரா சிங் சவுகான் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இங்கே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்; பா.ஜ.க, சார்பில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்துக்கு தலைமை தாங்கினார். பாஜகவின் தாரா சிங் சவுகானை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) வேட்பாளர் சுதாகர் சிங் களமிறங்கினார். இங்கே சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய இந்திய கூட்டணி கட்சிகள் ஆதரவு.

கோசி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

துப்குரி இடைத்தேர்தல், மேற்கு வங்காளம்: வடக்கு வங்காளத்தில் உள்ள துப்குரி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் டிஎம்சி , பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவளிக்கும் சிபிஐ(எம்) இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த 2021 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, அதற்கு முன் 2016ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சென்ற தொகுதி ஆகும் இது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜக எம்எல்ஏ பிஷு பதா ரே காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது. துப்குரி, ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பணியின் போது தனது உயிரைக் கொடுத்த சிஆர்பிஎஃப் ஜவான் ஜெகன்நாத் ராயின் மனைவி தபசி ராய்யை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. முன்னாள் டிஎம்சி எம்எல்ஏ மிதாலி ராய் சமீபத்தில் இணைந்ததால் அக்கட்சி ஒரு முனையுடன் தேர்தலைச் சந்திக்கும்.

பாஜக வேட்பாளருக்கு எதிராக, டிஎம்சி பேராசிரியரான நிர்மல் சந்திர ராயை அந்த இடத்தில் நிறுத்தி உள்ளது. சிபிஐ (எம்) வேட்பாளர் ஈஸ்வர் சந்திர ராய்க்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தன்பூர் மற்றும் போக்ஸாநகர், திரிபுரா: மேற்கு வங்காளத்தைப் போலல்லாமல், திரிபுராவில் உள்ள தன்பூர் மற்றும் போக்ஸாநகர் இடைத்தேர்தல்களில் சிபிஐ (எம்) மற்றும் ஆளும் பாஜக இடையே நேருக்கு நேர் போட்டி ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸும், திப்ரா மோதாவும் இரண்டு இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை, இது சிபிஐ (எம்) க்கு சாதகமாக மாறி உள்ளது.

லோக்சபா சீட்டை தக்க வைப்பதற்காக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான பிரதிமா பௌமிக் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தன்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஒரு காலத்தில் இடதுசாரிகளின் வலுவான கோட்டையாக இருந்தது தன்பூர். பாஜகவின் பிந்து தேப்நாத் மற்றும் சிபிஐ (எம்) இன் கவுஷிக் சந்திரா ஆகியோருக்கு இடையே நடக்கும் பலப்பரீட்சையாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் போக்ஸாநகர் ஒன்றாகும். இது சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ளது. மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இங்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ (எம்) கட்சியிடம் தோல்வியடைந்த தஃபஜல் ஹுசைனை போக்ஸாநகரில் பாஜக மீண்டும் களமிறக்கி உள்ளது.சிபிஐ (எம்) இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய சாம்சன் ஹக்கின் மகன் மிசான் ஹுசைனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சாம்சன் ஹக்கின் மரணம் காரணமாகவே இங்கே இடைத்தேர்தல் நடக்கிறது.

புதுப்பள்ளி கேரளா: கேரள முன்னாள் முதல்வர் மறைந்த உம்மன் சாண்டி 53 ஆண்டுகளாக இத்தொகுதியை வென்று சாதனை படைத்து வந்தார். சாண்டி இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலமானார்.

தற்போதைய இடைத்தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணியின் சாண்டி உம்மன் (உம்மன் சாண்டியின் மகன்), சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணியின் ஜாக் சி தாமஸ் மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏவின் லிகின்லால் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் அதே வேளையில், 1970 ஆம் ஆண்டு உம்மன் சாண்டி சகாப்தம் தொடங்குவதற்கு முன்பு கட்சி வசம் இருந்த இடத்தைக் கைப்பற்றும் என்று சிபிஐ (எம்) நம்புகிறது. இந்தியா கூட்டணி இங்கே பிரிந்து போட்டியிடுகிறது.

பாகேஷ்வர், உத்தரகண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. 2023 ஏப்ரலில் பாஜக எம்எல்ஏவும், அமைச்சருமான சந்தன் ராம் தாஸ் இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பசந்த் குமாரை எதிர்த்து மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி பார்வதி தாஸை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.பார்வதி தாஸ், பசந்த் குமார் ஆகியோரைத் தவிர, சமாஜ்வாதி கட்சியின் பகவதி பிரசாத், உத்தரகண்ட் கிராந்தி தளம் சார்பில் அர்ஜுன் தேவ், உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சியின் பகவத் கோஹ்லி ஆகியோரும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

டும்ரி, ஜார்கண்ட்: 2019 இல் JMM க்காக வெற்றி பெற்ற மாநில அமைச்சரவை அமைச்சர் ஜெகநாத் மஹ்தோவின் மரணத்திற்குப் பிறகு டும்ரி சட்டமன்றத் தொகுதி காலியானது. பாஜக ஆதரவுடன் ஏஜேஎஸ்யு சார்பில் போட்டியிடும் யசோதா தேவியை என்டிஏ வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஜெகநாத் மஹ்தோவின் மனைவி பெபி தேவியை இந்தியா கூட்டணி களமிறக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+