Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாஸ்டர் மைன்ட்".. பேசாமல் இதை பண்ணிடுங்களேன்.. "சரக்கா"? திமுகவை என்ன வானதி இப்படி கேட்டுட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு 1000 ரூபாய் என்று தெரிவித்துவிட்டு, இப்போது தகுதி வாய்ந்த மகளிருக்குத்தான் அளிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த தகுதி என்னவென்று தெரியவில்லை என்று பாஜகவின் மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன், ஒரு ஐடியாவையும் வானதியே, திமுக அரசுக்கு தந்துள்ளார்.

தமிழக மக்களால் கடந்த 2 வருடங்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார்.

 வேதனை வானதி

வேதனை வானதி

தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேட்கிறார் டிடிவி தினகரன்.. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் கேட்டு வருகிறார்.

 இழி அரசியல்

இழி அரசியல்

1000 ரூபாயை எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வீர்கள் என்று இந்த அனைத்து எதிர்க்கட்சியினரும் கேள்வியை கேட்டு வரும்போது, நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும், இதைவிட ஒருபடி மேலே போய், "எங்கள் வீட்டு பெண்களுக்கு உரிமை தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க நீ யார்?" தேர்தல் வாக்குறுதியில் தகுதி என்ற வார்த்தையே இல்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பிக் கொண்டு வருகிறார்... இந்நிலையில், மீண்டும் இந்த 1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்து, பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்..

 ஆதார் எண்

ஆதார் எண்

சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு இப்போது தகுதி வாய்ந்த மகளிருக்குத்தான் அளிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த தகுதி என்னவென்று தெரியவில்லை. ஒவ்வொருத்தரும் சரக்கு வாங்குவதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்... ஏனெனில் அவர் எப்படி இறக்கிறார் என்பது அப்போது தான் தெரியும்... குடியால் இறந்தார் என்றால் அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்.

 விதவைகள்

விதவைகள்

தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த உரிமைத்தொகைக் கொடுக்கும்போது அதிகமாக டாஸ்மாக் செலவு செய்யும் ஆண்மகன்களின் வீடுகளில் உள்ள மகளிருக்கு தான் முதலில் உரிமைத் தொகையை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தனியாக வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்படும். அதில் வாய்ஸ் மெசேஜ் அனுப்படும் என்றெல்லாம் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நவீனமயமான திட்டங்களை மாநில அரசு புகுத்தும் போது, முதலில் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும். அதன்பின்பு இம்மாதிரியான திட்டங்களை அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

 சாதி சாதீ

சாதி சாதீ

ராகுல் காந்தி தகுதிநீக்கம் விவகாரத்தைப் பொறுத்தவரை, பிரதமரை அவர் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை, மோடி என்ற குறிப்பிட்ட சமுதாயத்தை அவர் விமர்சனம் செய்துள்ளார் என்பது தான் இந்த வழக்கின் அடிப்படை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சாதி ரீதியாக யாரையும் விமர்சிக்கக் கூடாது என்பதே அடிப்படை. அதனால் தான் அவர் மீது இந்த வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரமதரை விமர்சித்தால் இந்த தண்டனை என்பது போல கொண்டு போவது சரியல்ல" என்றார் வானதி சீனிவாசன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+