பொள்ளாச்சி பாலியல் பலாத்கார பயங்கரம்.. பின்னணியில் யார்.. வேல்முருகன் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு அரங்கேறிய பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வீடியோ, ஆடியோ வெளியாகி பொதுமக்களின் குலைநடுங்க வைத்தது.

தொடர் போராட்டம்

தொடர் போராட்டம்

பத்திரிகை-தொலைக்காட்சி-சமூக வலைத்தளம் என அனைத்திலும் வெளியான அந்தக் கொடூர நிகழ்வு குறித்த செய்திகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உலுக்கின. இந்த பாலியல் கொடுமைகளுக்கு காரணமான, அதிமுகவை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகிய 5 பேரை காவல்துறை கைது செய்தது. மேலும், பாலியல் கொடூரத்தின் பின்னணியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருப்பதாக, திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பினர்.

ஜாமீனில் வெளியே வந்தனர்

ஜாமீனில் வெளியே வந்தனர்


அதன் காரணமாக, அதிமுகவின் முக்கிய நிர்வாகியான பார் நாகராஜன் கைது செய்யப்பட்டார். பின்னர், அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை காட்டிய அக்கறையால், எவ்வித எதிர்ப்புமின்றி ஜாமீனில் வெளியே வந்தார் பார் நகராஜன். இதுவே, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அதிமுக நிர்வாகிகள்

அதிமுக நிர்வாகிகள்

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக மாணவர் செயலாளர் அருளானந்தம் மற்றும் கரோன்பால்,பாபு ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளனர். இதில் அருளானந்தம் என்பவர், அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமாக இருந்துள்ளார்.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

இந்த வழக்கில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்பிருக்கலாம் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. எனவே, இந்த விசாரணையை சிபிஐ மேலும் தீவிரப்படுத்த வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+