சொல்லி அடித்த கில்லி! ஆக்ஷன் குயின் அமுதா! தீரஜ்குமார் எப்படி? வாய் திறந்த அதிகாரிகள்?
சென்னை: உள்துறை செயலாளராகப் பதவியேற்றுள்ள தீரஜ்குமார் எந்தளவுக்குச் சிறப்பான அதிகாரியாக பணியாற்றுவார்? இந்தத் துறையில் அவரது அனுபவம் எப்படி என்பது பற்றி சில அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.
உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தீரஜ்குமார் ஐஏஎஸ் பதவி அமர்த்தப்பட்டுள்ளார்.

அமுதா வழக்கமான ஒரு ஐஏஎஸ் அதிகாரியல்ல. அவருக்கு வேறு எந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கிடைக்காத அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரைச் சம்பாதித்தவராக வலம் வந்தார். குறிப்பாக 2015இல் சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது, சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பை அமுதா ஏற்றார். அதன்மூலம் ஊடகங்களின் அதிகப்படியான வெளிச்சம் அவர் மீது விழுந்தது. தாம்பரம் சுற்றுவட்டாரங்களிலிருந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் தைரியமான அதிகாரி என அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஆதரவும் அதிகரித்தது.
கடந்த 2018-ம் ஆண்டு மு.கருணாநிதி மறைந்தபோது அவரது இறுதிச் சடங்கைக் கட்டுக்கோப்பாக நடத்துவதற்கு ஒரு திறமையான அதிகாரியை வலைபோட்டுத் தேடிய தமிழக அரசு, இறுதியில் அமுதாவிடம் ஒப்படைத்தது. தனி ஒரு அதிகாரியாக காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து மிக அமைதியாக அந்த ஊர்வலத்தைச் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் நடத்திக் காட்டினார். அப்போதே திமுக மேல்மட்ட தலைவர்கள் அமுதா மீது ஒரு அன்பை வெளிப்படுத்தினர்.
இதனிடையே திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2020 ஜூலை பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். அப்போது மத்திய அரசுப் பணியிலிருந்து அமுதாவைக் கேட்டுப் பெற்றது தமிழக அரசு உள்துறை செயலாளர் பொறுப்பை அவருக்கு வழங்கியது. இவருக்கு முதல்வர் ஸ்டாலினிடம் தனி மரியாதை உள்ளதாகக்கூடச் சொல்லப்பட்டது. ஆகவே, செல்வாக்கு மிக்க ஐஏஏஸ் ஆக அவர் வலம் வந்தார்.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் பல அதிரடியான சோக சம்பவங்கள் அரங்கேறினர். குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு முன்னதாக நெல்லையில் காங்கிரஸ் தலைவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் ஆட்சிக்கு ஒரு கலங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தச் சவங்களின் நடுவே போக்குவரத்துத் துறைக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதல் விவகாரம் மிகப் பெரிய தலைவலியாக அரசுக்கு அமைந்தது. அதனைத் தொடர்ந்து அமுதா மேல்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்தார்.
இதை எல்லாம் மிஞ்சக்கூடிய அளவுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் மாநில அரசியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. எட்டப்பாடி கள்ளச்சாராய விவகாரத்தைப் பயன்படுத்தி போராட்டங்களைக் கையில் எடுத்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு திமுக கூட்டணியில் உள்ள விசிக உட்பட சில கட்சிகளே விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கின.
இந்நிலையில்தான் சென்னை மாநகர காவல் ஆணையராக அருள் ஐபிஎஸ் பணி நியமனம் செய்யப்பட்டார். அவர், பதவியேற்ற அன்றே, 'ரவுடிகளுக்கு என்ன மொழி புரியுமோ அந்த மொழியில் புரியவைக்கப்படும்' என்று பேசினார். கூடவே சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக டேவிட்சன் தேவாசீர்வாதமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாறுதல் செய்யப்பட்டனர். அதன் உச்சமாக உள்துறை செயலாளரே அமுதாவே மாற்றப்பட்டுள்ளார்.
இப்போது அருள் ஐபிஎஸ் புதிய பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சில ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர் முன்பே சொன்னதைப்போல ரவுடிகளின் மொழியில் பேச ஆரம்பித்திருக்கிறார். ஆனால், மனித உரிமை ஆதரவாளர்கள் இந்த என்கவுண்டரை எதிர்த்து வருகின்றனர்.
புதியதாக உள்துறை செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தீரஜ் குமார் பின்புலம் என்ன? அவர் எந்தளவுக்குச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இந்த தீரஜ் குமார் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் பிறந்தார். இவர் ஒரு பிடெக் சிவில் இன்ஜினியர். 1993இல் தேர்வான ஐஏஎஸ் பேட்ச் இவர். ஜூனியர் லெவல் ஐஏஎஸ் பயிற்சியை ஐஐஎம் பெங்களூருவில் முடித்தார். இதனைத் தொடர்ந்து 1994இல் கோவை மாவட்ட இணை ஆட்சியராகப் பதவியேற்றார். 96 வரை இந்தப் பதவியில் அவர் நீடித்தார்.
அதன்பின்னர் நில வருவாய் மேலாண்மைத் துறையை இவருக்குத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. அதன் மூலம் மாவட்ட நிர்வாகம் சார்ந்த பொறுப்புகளையும் கவனித்து வந்தார். அதன்பிறகு துணை, கூடுதல் ஆட்சியர் பொறுப்புகளைப் படிப்படியாகப் பெற்று மேலே உயர்ந்துவந்தார்.
அதன்பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டு திருநெல்வேலி நகர்ப்புற மேலாண்மை ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கிருந்து பிறகு திருவண்ணாமலை ஆட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டார். 2004இல் சேலம் தொழில்துறை இயக்குநர், 2006இல் தொழில்துறை கூடுதல் செயலாளர், 2009ல் வணிகவரி ஆணையர் எனத் தமிழ்நாட்டில் பல துறைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயல்பட்டு வந்த இவரை 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு அழைத்துக் கொண்டது.
மீண்டும் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குத் திரும்பிய அவருக்கு ஊரக மேம்பாடும், வறுமை ஒழிப்பு எனப் பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 'வாழ்ந்து காட்டுவோம்' என்ற திட்டத்தின் இயக்குநர் பதவி இவருக்குக் கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு இவர் பள்ளிக்கல்வித்துறைக்குச் செயலாளரானார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2023 ஆம் ஆண்டு வணிகவரித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் இந்தப் பொறுப்புக்குப் பணி அமர்த்தப்பட்ட காலத்தில்தான் உள்துறைச் செயலாளர் பொறுப்பு அமுதா ஐஏஎஸ்க்கு கொடுக்கப்பட்டது. மத்திய அரசுப் பணிக்குச் சென்றவரைக் கேட்டுப் பெற்ற சில மாதங்களிலேயே முதல்வர் ஸ்டாலின் இவரை மாற்றியிருக்கிறார்.
இந்த மாற்றம் தற்காலிகமானதுதான், மீண்டும் ஒரு பவர்ஃபுல் பதவியில் அமுதா அமர்த்தப்படுவார் என்றும் ஒரு பேச்சு அடிப்பட்டு வந்தது. ஆனால், மற்றொரு பக்கம் அமுதா ஐஏஎஸ் தான் எப்படிச் சறுக்கினோம் என்பது பற்றி தீவிரமாகச் சிந்தித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் இன்று முதல்வரின் முகவரி திட்டச் சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் முதல்வரின் குட் புக்கில்தான் இருக்கிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. சொல்லி வைத்த மாதிரி கில்லியாக செயல்பட்டுள்ளார் அமுதா. அவர் எப்போதும் நம்பர் 1 அதிகாரிகளின் பட்டியலில் இருப்பவர் என்பதை மீண்டும் தனது செயல்பாடு மூலம் சமன் செய்து காட்டியுள்ளார். அதற்குக் காரணம், கருணாநிதி இறுதி ஊர்வலத்தின் போது கடமைத் தவறாமல் அமுதா நின்றதுதான். அந்தப் பாசத்தை திமுக தலைமை மறக்காமல் காட்டி வருகிறது.
இதனிடையே தீரஜ்குமாருக்கு சட்டமன்றத் தேர்தல் நெருக்க உள்ள நிலையில் பல அசைன்மென்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆட்சிக்கு எதிராகச் செய்யப்படும் சதி வேலைகளைக் குறித்து அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவர் சில புதிய பாணி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அந்தளவுக்கு உள்துறையில் ஆல்ரவுண்டராக இவர் செயல்படுவார் என்று சக அதிகாரிகள் சான்றிதழ் தருகின்றனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications