சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற எஸ்ஐ.. பாய்ந்த நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் வீச முயன்ற உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே எஸ்ஐயிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிக்கான லீக் போட்டியில், இன்று (அக்.23) பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியது பிற்பகல் 12 மணி அளவில் தொடங்கியது. போட்டி தொடங்கும் முன்பாக சுமார் 12 மணி அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்திருந்தார்கள்.

Action taken against SI who tried to throw national flag in garbage can at Chennai Chepakkam stadium

சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தகுந்த சோதனைக்கு பின்பே ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்குள் அனுமதிக்கபட்டார்கள். முன்னதாக மைதானத்திற்கு வரும் ஒரு சில ரசிகர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி எதிர்ப்புகளை தெரிவிக்க போலீசுக்கு ரகசிய தகவல கிடைத்தது.

அதன் காரணமாக ஒவ்வொரு ரசிகர்களும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே, மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் , ரசிகர்கள் கொண்டு வந்த இந்திய தேசிய கொடியை பறிமுதல் செய்து, அங்கிருக்கும் குப்பை தொட்டியில் போட முயன்றதாக கூறப்படுகிறது.

உடனே அங்கிருந்து ரசிகர்கள், தேசியக்கொடியை குப்பை தொட்டியில் விசாதீராடீதீங்க என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட உதவி ஆய்வாளர் நாகராஜ், தேசியக்கொடிகளை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்த காவலர் வாகனத்திற்கு பின்னால் சென்று நின்று கொண்டார்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடைபெறுவதால், தங்களை இந்திய தேசிய கொடியை உள்ளே கொண்டு செல்ல காவல்துறை அனுமதிக்காததாக, ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள். தற்போது, இது குறித்து வீடியோ காட்சிகள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் போட்டியின் போது மத்திய அரசை விமர்சிக்கும் விதமாகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் கொண்டு செல்வதை தடுக்கும் விதமாகவுமே காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் செம்பியம் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் அதை தவறாக புரிந்து கொண்டு, தேசிய கொடியை பறிமுதல் செய்து இருக்கிறார். ஆனால் உண்மையில் ரசிகர்கள் அனைவரும் தேசிய கொடியை மைதானத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ரசிகர்கள் மைதானத்திற்குள் இந்திய தேசிய கொடியை கொண்டு செல்ல மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய கொடியை குப்பை தொட்டியில் வீச முயன்ற செம்பியம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணிபுரியும் நாகராஜ் என்பவர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+