சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்பவும் இந்த 6 மாவட்டங்களில் தான் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடு--.. டேட்டா ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கோவிட் டேட்டா அனாலிஸ்ட் விஜயானந்த் தெரிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகமாக உள்ளது. எங்கு குறைவாக உள்ளது. எங்கு அதிக ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

அதில் உள்ள தகவலின் படி, கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை, மற்ற மாவட்டங்களைவிட மிக அதிகமாக உள்ளது. சென்னையில் அதிகமாக இருந்தாலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

திருப்பூர்

கோவையில் 40570 நோயாளிகளும், திருப்பூரில் 18594 நோயாளிகளும், ஈரோட்டில் 16093 நோயாளிகளும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். திருச்சியில் 11013 நோயாளிகளும், சேலத்தில் 8762 நோயாளிகளும், நாமக்கல்லில் 7285 நோயாளிகளும் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் மேலே சொன்ன 6 மாவட்டங்களில் தான் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் குறைந்து வருகிறது.

சேலத்தில் எவ்வளவு

சேலத்தில் எவ்வளவு

ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை மட்டுமல்ல, தினசரி பாதிப்பும் அதிகமாக உள்ளது. ஈரோடில் 1653 பேருக்கும், திருப்பூரில் 1338 பேருக்கும், சேலத்தில் 1140 பேருக்கும், திருச்சியில் 987 பேருக்கும், நாமக்கல்லில் 914 பேருக்கும், கோவையில் 3332 பேருக்கும் தொற்று பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அதிகம்

கோவையில் அதிகம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும் போது தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் சதவீதம் ஒன்று அல்லது 2 அல்லது 3 சதவீதம் என்கிற அளவில் தான் உள்ளது. ஆனால் கோவையில் 13 சதவீதமும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 8 சதவீதம் , ஈரோட்டில் 6 சதவீதம் நோயாளிகளும், திருப்பூரில் 5 சதவீதமும், செங்கல்பட்டில் 4 சதவீதமும், திருச்சியில் 4 சதவீதமும் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

நாமக்கல் 3 சதவீதம், தஞ்சாவூரில் 3 சதவீதம், கன்னியாகுமரியில் 3 சதவீதம், திருவள்ளூரில் 3 சதவீதம் ஆக நோயாளிகள் எண்ணிக்கை உள்ளது, மதுரையில் 2 சதவீதம் , விருதுநகரில் 2 சதவீதம், நீலகிரியில் 2 சதவீதம், தூத்துக்குடியில் 2 சதவீதம், கடலூரில் 2 சதவீதம், திருவாரூரில் 2சதவீதம், தேனியில் 2 சதவீதம், காஞ்சிபுரத்திலும் 2சதவீதம் ஆக உள்ளது, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், வேலூரிலும் 2 சதவீதம் அளவிற்கே கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உள்ளதாக கோவிட் டேட்டா அனலிஸ்ட் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

English summary
covid Data Analyst Vijayanand said that 6 districts including Erode, Salem, Trichy, Namakkal, Tiruppur and Coimbatore have the highest number of active patients with corona infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X