மோடிக்கு நன்றி கூறிய அஜித் குமார்.. சினிமாவில் 33 ஆண்டு நிறைவையொட்டி வந்த அறிக்கையை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் குமார் சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் இன்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

actor-ajit-kumar-says-thanks-for-pm-narendra-modi-for-his-padma-bhushan-award

இதுதொடர்பாக நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானது தான். இந்த பயணத்திற்காக மழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி!

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

எனக்கு மதிப்புமிக்க பத்மபூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய ஜனாதிபதி மேடம் திரெபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த விருதை மத்திய அரசு அறிவித்தது.

இந்த பத்ம பூஷண் விருதை அஜித் குமார் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி பெற்று கொண்டார். டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கையில் இருந்து அஜித் குமார் பத்ம பூஷண் விருது பெற்றார். இந்நிலையில் தான் அந்த விருதுக்கு தன்னை தேர்வு செய்து வழங்கியதை நினைவு கூர்ந்து அஜித் குமார் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+